Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொலைந்து போன சொத்து ஆவணங்களை மீண்டும் பெறுவதில்.. இப்படியும் சிக்கலா.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சொத்து ஆவணங்கள் மாயமானது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சொத்து ஆவணங்களை வழங்காததற்கு சாக்குப்போக்கு கூறுவதை ஏற்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், என்னுடைய உறவினர் புஷ்பம் என்பவருக்கு, சொந்தமாக விருதுநகர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இருந்தது. அவர் இறந்த பின்பு அந்த சொத்தை அவருடைய மகன் விஜய் ஆண்டனி, தனது பெயருக்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் சொத்து ஆவணங்கள் மாயமானது.

Property Deed document Madras High Court verdict on the issue of recovering lost property documents

இதையடுத்து அந்த ஆவணத்தை பெறுவது சம்பந்தமாக விருதுநகர் மாவட்ட பொது தகவல் அதிகாரியிடம் ஆர்டிஐ சட்டத்தில் விண்ணப்பித்தார். அவர் பதில் அளிக்காததால், விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அதிகாரிகளிடமும் விண்ணப்பித்தார். அதன் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய என்னை அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் என் சார்பில் விஜய் ஆண்டனி ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. ஆனால் பலமுறை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அவரிடம் உரிய ஆவணங்களை விருதுநகர் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் வழங்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையரின் உத்தரவு நிறைவேற்றப்படாமல் அவமதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யவும், மாவட்ட பொது தகவல் அதிகாரி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொது பதிவுகள் அனைத்தும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பராமரிக்கப்படும். பல்வேறு காரணங்களால் அவை அழிந்துபோக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாலாஜி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "மனுதாரர் நில ஒதுக்கீடு சம்பந்தமான ஆவணங்களை கோருகிறார். அவை தொலைந்துவிட்டன, அழிக்கப்பட்டன என்பதை ஏற்க முடியாது. சொத்து ஆவணங்கள் என்பது நிரந்தர பதிவாகும். எனவே மனுதாரருக்கு பதிவு ஆவணங்களை வழங்காததற்கு அதிகாரிகள் சாக்குபோக்கு கூறுவதை ஏற்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து தேவையான தகவல்களை மனுதாரருக்கு வழங்க 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+