மக்கள் சந்திப்பின் போது மதுரை மேயர், கவுன்சிலர்களை தவிர்க்கும் பிடிஆர்.. பின்னணியில் முக்கிய காரணம்!
மதுரை: ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒருமுறை தனது சொந்த தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிவது வழக்கம். நேற்று மக்களை சந்தித்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களை தவிர்த்திருப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே மதுரையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தரப்பு மதுரையின் பல்வேறு தொகுதிகளிலும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக தரப்பும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்து, அடுத்தக் கட்ட பணிகளை செய்து வருகிறது.

அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறார். இம்முறை மதுரையில் மாநகராட்சியில் நடந்த ஊழல் விவகாரம் மிகப்பெரிய சிக்கலை திமுகவுக்கு உருவாக்கி இருக்கிறது. மாநகராட்சி சார்பாக சாலைப் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், தண்ணீர் குழாய் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் ஊழல் விவகாரத்தில் மேயரின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி தொடர்ச்சியாக இருப்பதே திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் உணர்ந்தே இருக்கிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் தொகுதியில் உள்ள மக்களை சந்திப்பது வழக்கம்.
அப்போது மக்களின் கோரிக்கைகள், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த சந்திப்பின் போது எப்போது மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று மக்களை சந்தித்த போது மேயர், கவுன்சிலர்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவிர்த்துவிட்டு சென்றுள்ளார்.
இதனால் மதுரை மத்திய தொகுதியில் உள்ள பகுதிச் செயலாளர், கிளைச் செயலாளர்களுடன் மட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்தது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் சொத்து வரி முறைகேடு விவகாரம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்.
மதுரை மேயராக இந்திராணியை கொண்டு வந்ததும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத அமைச்சர் என்ற பெயர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இருக்கும் நிலையில், மாநகராட்சியில் அதிகாரத்தில் இருக்கும் நபர்களை சமீப காலமாக அமைச்சர் தவிர்த்து வருவதாக பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications