நாளை மதுரை மத்திய தொகுதி வரும் எடப்பாடி.. இன்றே வீதியில் இறங்கிய அமைச்சர் பிடிஆர்.. என்ன நடந்தது?
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று அந்த தொகுதியின் எம்எல்ஏ-வான பிடிஆர் பழனிசாமி தியாகராஜன் வீதி வீதியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளார். அப்போது மக்கள் கொடுத்த மனுக்களையும் பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கொடுத்துள்ளார்.
மதுரையில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த 4 நாட்கள் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கிறார்.

அதற்கான ஏற்பாடுகளை ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூகங்களின் ஆதரவை பெறுவதே எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக உள்ளது. அதற்காக மதுரையில் 10 தொகுதிகளுக்கு மட்டும் 4 நாட்களை ஒதுக்கி இருக்கிறார். ஏற்கனவே விஜய்யின் மதுரை மாநாடு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது.
ஓபிஎஸ் உள்ளிட்டோரும் எதிராக நிற்பதால், மதுரையில் அதிமுக கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதற்கு முன்பாக இன்று காலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வீதிகளில் நடை பயணமாக சென்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அங்கிருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்கள் கொடுத்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார். எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே திமுகவின் கட்சிப் பணிகளில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெரியளவில் கவனம் செலுத்தவில்லை. அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இடையிலான மோதல் காரணமாக, மதுரையின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே பிடிஆரின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான பொன் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் மேயர் இந்திராணியையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருப்பதால், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் நெருக்கடி எழுந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையே மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்திருக்கிறார். இதனால் திமுக தலைமையிடம் இருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications