55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாஜராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். ஹாட்ரிக் வெற்றியை எதிர்கொள்ளியுள்ள அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் தவெக சார்பாக முஸ்தபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் மதுரை மத்திய தொகுதி களம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சாதகமாக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு சிறந்த டேட்டாவை திரட்டி இருக்கிறோம். ஒவ்வொரு குடும்பம் தொடர்பாகவும் தகவல்களை சேர்த்து வைத்திருக்கிறோம்.

10 லட்சம் லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை திமுக செய்துள்ளது. ரூ.22 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப்பை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து பெற்று கொடுத்துள்ளோம். அதேபோல் மகளிர் உரிமைத் தொகுதி பலருக்கும் வங்கி கணக்கில் பணம் ஏறிய பின்னரே புரிய வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தால் பல லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
ரூபாய் கணக்கில் எல்லா நம்பர்களும் காலத்திற்கேற்ப உயர்த்தி கொண்டே இருக்கும். ஒவ்வொரு நபர்களின் ஊதியமும் 10 ஆண்டுகளுக்கு முன் வேறு.. இப்போது வேறு.. வாங்கும் கடனுக்கு வட்டி தான் மிகப்பெரிய பிரச்சனை. வட்டி நம் வருமானத்தில் பெரிய செலவை வைத்தால், அது சிக்கல். ஏனென்றால் கடன் வாங்கி மக்கள் திட்டங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் செலவிடலாம்.
உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் கடன், வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் வட்டிக்கு செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை மோசமாகவில்லை. அதேபோல் நல்ல நிலைக்கும் செல்லவில்லை. ஆனால் 2014 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறை அதிகரித்தது. வருமானத்திற்கு அதிக வட்டி கட்டப்பட்டது.
கொரோனா காலத்தில் இன்னும் மோசமான பின், திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் வருவாய் பற்றாக்குறையை பாதியாக குறைத்தோம். அடுத்த 3 ஆண்டுகளில் அதிக திட்டங்களை கடன் பெற்று நிறைவேற்றினோம். அது நன்மையா? சிக்கலா? என்று கேட்டால், தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19% வந்திருக்காது. அதேபோல் 16 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சி வந்துள்ளது.
அதேபோல் மனிதநேயம், தகவல் மற்றும் செயல் திறன் ஆகிய 3லும் ஒப்பிட்டால் அதிமுக ஆட்சியை விடவும் திமுக சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளது. சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். இந்த முறை 55 முதல் 60 சதவிகிதம் வரை நான் வாக்குகளை பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மக்கள் ஆதரவு எவ்வளவு இருந்தாலும், செயல்படுத்தி வாக்கு எடுக்க வேண்டும். அதிமுக பலமுறை ஆட்சி நடத்திய கட்சி. அதனை குறைத்து பேச நினைத்தால், அது சரியல்ல. இது திமுக vs தவெக இடையிலான தேர்தல் என்று விஜய் சொல்வது தவறு. அதிமுக வலுவாக கட்சி, வலுவான இயக்கம். நல்ல கட்டமைப்பு வைத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்!












Click it and Unblock the Notifications