சென்னை தான் தலைநகர்.. எங்களுக்கு தலைவர் ஸ்டாலின்! பஞ்சாப் முதல்வரே சொல்லிட்டாரே! அமைச்சர் பெருமிதம்
மதுரை: மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் என்றும் இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார் எனவும், மாநிலங்கள் உரிமைக்காக தலைமை தாங்குகிற இடம் சென்னை எனவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், பெருமையுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளர்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் என்றும் இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளர். மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுவரையறை அநீதி உள்ளிட்டவைகளில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோவி.செழியன்,"மத்திய அரசே முறையாக நிதியை தா என தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கேட்ட பிறகு தான் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது அண்டை மாநில முதல்வர்களும் நம்முடைய தளபதியின் கரங்களை பற்றுகிறார்கள். நேற்றைய தினம் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தென்னிந்திய முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் வட இந்தியா பஞ்சாப் முதல்வரும் கலந்து கொண்டனர். அதில் அவர் பேசும் போது நான் பஞ்சாபில் பிறந்தாலும் மாநில உரிமைக்காக நான் தலைமை தாங்குகிற இடம் சென்னை. எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் என்று கூறுகிறார்கள்.
இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதலிடத்தில் உள்ளார். எனவே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து திமுக நிர்வாகிகளும் முழு பலத்துடன் பணி செய்து இருநூறு தொகுதிகளில் 234 தொகுதியையும் திமுக கூட்டணி வென்றெடுக்க பாடுபடுவோம்" என தெரிவித்தார்.
கூட்டு நடவடிக்கை குழு: நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் வெகுவாக குறையும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது தொடர்பாக சென்னையில் கடந்த 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அதுமட்டுமல்லாமல் பிஆர்எஸ் கட்சியின் கே.டி.இராமாராவ், பிஜு ஜனதா தள் கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முடிவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ள வேண்டும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications