அவர் சொல்றது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு.. ஓபிஎஸ்ஸுக்கு இதெல்லாம் ஒரு சாக்கா?.. மாஜி விமர்சனம்
மதுரை: அதிமுக தலைமை அலுவலகம் யார் அப்பா வீட்டுச் சொத்தும் இல்லைதான். பிறகு சொந்த வீட்டிலேயே ஓபிஎஸ் திருடியது ஏன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டத்து அதிமுக நிர்வாகிகள் 500- க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ்ஸின் வீட்டுக்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் ஓபிஎஸ் தன் பக்கத்து நியாயத்தை பேசினார்.
அவர் கூறுகையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வானகரத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் போது தலைமை அலுவலகத்தை பூட்டியது ஏன், அவ்வாறு பூட்டுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

எடப்பாடி
இதென்ன எடப்பாடியின் அப்பா வீட்டுச் சொத்தா என்ன? ஜானகி அம்மாள் கழகத்திற்காக தானமாக கொடுத்த சொத்து. பிறகு நான் ஏதோ திருடி விட்டேன் என்கிறார்கள். என் வீட்டில் நான் ஏன் திருட போகிறேன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த நிலையில் மதுரையை அடுத்த திருமங்கலத்தில அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஓபிஎஸ் போக்குவரத்து நெரிசல்
அப்போது அவர் பேசுகையில் ஓபிஎஸ் போக்குவரத்து நெரிசலால் பொதுக் குழுவுக்கு போக முடியவில்லை என சின்னப்புள்ளை போல் கூறுகிறார். யாராவது சொந்த வீட்டில திருடுவார்களா, இது பற்றி வழக்கு உள்ளது. தலைமை மீது ஆசை இல்லை என சொல்வது ஒரு நாடகம். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றிய பெருமை எடப்பாடி பழனிசாமிக்கே சொந்தம்.

99 சதவீதம்+ முழு ஆதரவு
எவ்வளவோ சோதனைகளை கடந்தவர் எடப்பாடி பழனிசாமி,. சுயநலம் கொண்ட நபர்களிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றியவர். அதிமுக நிர்வாகிகள, மாவட்டச் செயலாளர்கள் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். இது புரியாமல் தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக கூறுகிறார்.

தகுதியே இல்லை
போக்குவரத்து நெரிசலால் தன்னால் பொதுக் குழு கூட்டத்திற்கு வர முடியவில்லை என ஓபிஎஸ் குழந்தை போல் கூறுகிறாரே. இவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? அதற்கான தகுதியை ஓபிஎஸ் எப்போதோ இழந்துவிட்டார் என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications