"எடப்பாடி தான் ஒரே தலைமை.! அவங்க தேவையில்லை.." சசிகலா பற்றி கேட்டதும் டக்கென சொன்ன ராஜன் செல்லப்பா

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்னும் தொடர்ந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை தான் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவருக்குச் சாதமாகவே தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவரது செயல்பாடுகளும் பேட்டிகளும் ஒற்றை தலைமை என்பதை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.

 அதிமுக

அதிமுக

இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா அதிமுக விவகாரம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தொகுதியில் இருக்கும் முக்கிய 10 பிரச்சினைகள் கொண்ட பட்டியலைக் கொடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். அதன்படி ராஜன் செல்லப்பா தனது தொகுதியின் பிரச்சினை பட்டியலை அனீஷ் சேகரிடம் இன்று வழங்கினார்.

 ராஜன் செல்லப்பா

ராஜன் செல்லப்பா

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜன் செல்லப்பா, "திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்போம் எனக் கூற பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. திருக்கோயில் பணி, பாதாளச் சாக்கடை திட்டப் பணி எனப் பல பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளது. இதில் கவனம் செலுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 திமுக அரசு

திமுக அரசு

வீட்டு வரி தொடங்கி மின்சார கட்டணம் வரை அனைத்தையும் இந்த திமுக அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மகளிருக்கு என இலவச பேருந்து சேவையை அறிவித்தார்கள். அதில் கூட பயன்படாத சம்பந்தமே இல்லாத ரூட்களில் மட்டுமே இந்த இலவச பேருந்துகளை இயக்குகிறார்கள். இதனால் பெண்களுக்குப் பெரியளவில் பயன் கிடைப்பதில்லை. தமிழக அரசு மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை ஏதும் செய்யவில்லை.

 திட்டங்கள் இல்லை

திட்டங்கள் இல்லை

தாலிக்குத் தங்கம் திட்டம், மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் இறங்கி உள்ளார். அதிமுக அரசில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளிலேயே திமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. திமுக அரசு மக்கள் நலனுக்கு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட பாலங்கள், கட்டிடங்களைத் தான் முதல்வர் இப்போது திறந்து வைத்து வருகிறார். மதுரைக்கு அவர்கள் அறிவித்த பல திட்டங்களில், அந்த நூலகத்தைத் தவிர வேறு எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை. எல்லாமே அறிவிப்புடன் அப்படியே நிற்கிறது" என்றார்.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ் மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இதில் போலீசார் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டனர். நீதித்துறை அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். ஓபிஎஸ் மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். கூட இருப்பவர்கள் தான் அவரை தவறாக வழிநடத்த முயல்கின்றனர்.

 அந்த தவறை செய்ய மாட்டார்

அந்த தவறை செய்ய மாட்டார்

ஏற்கனவே தவறான வழியில் பயணித்து விட்டோமே.. என்ன செய்வதென்று தெரியாமல் ஒ.பி.எஸ் உள்ளார். இந்த கழகத்தில் அவர் இருந்தவர் தான். எனவே, தொண்டர்களின் வெறுப்பை அவர் மேலும் மேலும் சம்பாதித்துக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்.ஓபிஎஸுக்கு திமுகவுடன் தொடர்பு இருக்கிறது. இதனால் தான் அவரும் சரி, அவரது மகனும் சரி திமுக அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

 திமுக உடன் தொடர்பு

திமுக உடன் தொடர்பு

நாங்கள் ஆதாரத்துடன் அவருக்கு திமுக உடன் தொடர்பு இருக்கிறது எனச் சொல்கிறோம். ஆனால், இதற்குப் பதிலாக ஏதோ சொல்ல வேண்டும் என்று எங்களுக்கு திமுக உடன் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். எம்ஜிஆர் தெளிவாகச் சொல்லிவிட்டார் திமுக தீய சக்தி அதை அழிக்க வேண்டும் என்று. இப்போது தலைமை பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

 நடக்காது

நடக்காது

ஒ.பி.எஸ் திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால் அவரை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம், ஆனால் அதற்கு தற்போதைய காலகட்டத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை. ஏனென்றால், அவரது ஆதரவாளர்கள் திமுக அரசைத் தொடர்ந்து பாராட்டியே வருகின்றனர். இதையெல்லாம் அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.

 சசிகலா, டி.டி.வி தினகரன்

சசிகலா, டி.டி.வி தினகரன்

சசிகலா, டி.டி.வி தினகரன் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் கட்சியில் இணைப்பது தொடர்பாகத் தலைமை முடிவு செய்யும்.. அதிமுகவுக்கு இனி யாரது தயவும் தேவையில்லை. அதிமுக ஏற்கனவே மிக வலுவாக உள்ளது, அதிமுகவுக்கு இனி புதிய தலைவர்கள் தேவையில்லை, எங்கள் தரப்பில் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள், ஒ.பி.எஸ் சொல்வதை மக்கள் நம்பவில்லை" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+