போலீசுடன் மல்லுக்கு நிற்கும் ராம ரவிக்குமார்! “காவல் ஆணையர் வந்தால்தான் நகர்வேன்” - ராம ரவிக்குமார்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, உயர்நீதமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அவருடன் காவல் ஆணையர் செல்ல வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தற்போது போலீசுடன் ராம ரவிக்குமார் மல்லுக்கு நின்று வருகிறார்.
திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், தர்காவுக்கு அருகில் உள்ள தீப தூணில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இதனை அடுத்து இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் திருநாளில் மனுதாரர் கோரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். டிசம்பர் 1ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று மனுதாரர் மீண்டும் உயர்நீதிமன்ற கிளையை அணுகியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மனுதாரருடன் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பி தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். மறுபுறம் திருப்பரங்குன்றம் கோயில் அருகே இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் அதிக அளவில் குவிந்து இருந்ததால், பதற்றத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க பட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறி பாஜகவினர் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், காவல் ஆணையர் மனுதாரருடன் சென்று மனுதாரர் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால் போலீசார் மனுதாரர் மற்றும் பாஜகவினரை மலைக்கு அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காவல்துறையை இடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, நயினார் நாகேந்திரன் மற்றும் எச். ராஜா ஆகியோர் உட்பட பாஜகவினர் ஏராளமான கைது செய்யப்பட்டனர். மறுபுறம் ராம ரவிக்குமார் காவல் ஆணையர் வரும் வரை நான் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications