மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பிய போது திடீர் மரணம்
மதுரைக்கு நேற்று நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென்று மரணமடைந்தார்.
Recommended Video
மதுரை: நீட் தேர்வு எழுத மதுரைக்கு வந்த மாற்றுத் திறனாளி மாணவி, சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத மாணவ, மாணவிகள் மையங்களுக்கு திரண்டு வந்திருந்தனர்.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவரும் தேர்வு எழுதினார். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. நீட் தேர்வு எழுதுவதற்காக சொந்த ஊரிலிருந்து மதுரைக்கு வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு பஸ்ஸில் ஊர் திரும்பிகொண்டிருந்தார்.
திருப்புவனம் அருகே பஸ் சென்றபோது, சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து பஸ்ஸில் இருந்தவர்கள் பதறி போனார்கள். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்து, சந்தியாவை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
நீட் தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் மதுரையில் மட்டுமல்லாது, ராமநாதபுரம் மாவட்டத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications