எலி காய்ச்சல்.. மதுரை அருகே மலைவாழ் கிராமங்களில் அதிகரிப்பு.. உலுக்கிய உசிலம்பட்டி
மதுரை: உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு எலிக் காய்ச்சல் பரவி வருவதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 100-க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்ற 3 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 பேரும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த காய்ச்சல் குறித்து அறிந்து கொள்ள மருத்துவர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குழந்தைகளுக்கு பரவுவது எலிக் காய்ச்சல் என பரிசோதனை முடிவு வந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் காய்ச்சல் பரவாத வண்ணம் அந்த கிராமத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ஐயப்பன், எலிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து முறையான மருத்துவர்களை கொண்டு அதிநவீன சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் பெரியவர்களுக்கும் பரவும் என கூறப்படும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சல் பரவாத வண்ணம் உரிய சிகிச்சைகளை அளித்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications