எனக்கு ஒரு டவுட் இருக்கு! ஆன்லைன் ரம்மிக்கும் அரசுக்கு கூட்டு? பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : ஆன்லைன் ரம்மியை தடை செய்ய காலம் தாழ்த்துதை பார்த்தால் தமிழக அரசு உடந்தையாக உள்ளதா என்ற சந்தேகமும் அச்சமும், ஐயமும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    எனக்கு ஒரு டவுட் இருக்கு! ஆன்லைன் ரம்மிக்கும் அரசுக்கு கூட்டு? பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்!

    ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் தொடக்க விழா சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளிகள் நடைபெற்றது. இரண்டு ண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 28 அணிகள் பங்கேற்கிறது

    இந்த போட்டியினை துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு தேசிய கொடியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.

    ஆர்.பி.உதயகுமார்

    ஆர்.பி.உதயகுமார்

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்," பாரத பிரதமர் மோடிஜியின் வேண்டுகோளை ஏற்று எடப்பாடியார் ஆணைக்கிணங்க, இளைஞர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தியாகச் செம்மல்களின் நினைவை கூறும் வகையில் தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு, மாணவர்களின் நலன் கருதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மடிக்கணினி திட்டத்தை வழங்கினார்கள் அத்துடன் 14 வகை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது, இதுவரை 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது.

     திமுக அரசு

    திமுக அரசு

    ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை மடிக்கணினி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை, அதேபோல் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை என்று எடப்பாடியார் அறிக்கை வெளியிட்டு சுட்டிக்காட்டி உள்ளார்.
    இளைஞர்களிடையே போதைப்பொருள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று எடப்பாடியார் திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆன்லைன் ரம்மி

    ஆன்லைன் ரம்மி

    திமுக ஆட்சி அமைத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து 28 பேர்கள் தற்கொலை செய்து கொண்டனர் உள்ளனர், அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் உள்ளது என்ற கவலை அளிக்கும் சூழ்நிலை உள்ளது, கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் கூட, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார்

    அரசு உடந்தை

    அரசு உடந்தை

    அடுத்த தலைமுறையை காக்க அரசுக்கு பொறுப்பு உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உரிய சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும்.இன்னமும் குழு போடுகிற கருத்து கேட்கிற அரசாக திமுக அரசாக உள்ளது இதற்கு எதற்கு கருத்துக்கள் கேட்க வேண்டும் இது நாடறிந்த சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் போடப்பட்டுள்ளது நடைமுறையில் கூட இருக்கிறது .திமுக அரசு நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைத்து வாதாட காரணத்தினால், அரசு பின் வாங்கியதால் தடை நீக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் திமுக அரசு மீது மிகப்பெரிய சந்தேகம் இருந்துள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய காலம் தாழ்த்துதை பார்த்தால் இந்த அரசு அதற்கு உடந்தையாக உள்ளதா என்ற அச்சமும் ஐயமும் உள்ளது." என கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+