திருமாவளவனுக்கு உரிமை உள்ளது.. அதிமுக கூட்டணியில் விசிக? ’அவர்’ தான் சொல்லனும்.. ‘மாஜி’ சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கூறியது தவறில்லை எனவும், கூட்டணியை உருவாக்கி அவர்களின் பலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேரறிஞர் அண்ணாவே சொல்லியிருக்கும் நிலையில், கூட்டணியில் உள்ளவர்களுக்கும் கருத்து சுதந்திரமும், உரிமையும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

அமெரிக்க பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் காலை சென்னை திரும்பினார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டது.

thirumavalavan vck rb udhayakumar

அதில் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசி இருந்தார். சில நிமிடங்களில் அந்த வீடியோ அழிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 11:30 மணியளவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கேப்சனோடு அந்த வீடியோ மீண்டும் வெளியிடப்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த வீடியோவும் டெலிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவில்,"எதிர்த்து பேசக் கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது, போராடக் கூடாது, உயர்ந்த தகுதிக்கு வர ஆசைப்படக் கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது. தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி. அமைச்சரவையில் பங்கு வேண்டும். இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகளை இதனை கோரினார்களா என தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு வேறு, தொகுதிப் பங்கு வேறு. 1999 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் அடியெடுத்து வைத்த போது முதல் கோரிக்கை, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே. கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்" என பேசியிருந்தார்.

இந்த நிலையில் கூட்டணியில் உரிய பங்கு மரியாதை கிடைக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருப்பதாகவும், அதனை திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தவே அந்த வீடியோவை அவர் போட்டு இருக்கிறார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திருமாவின் கருத்துக்கு ஆதரவளிப்பது போல், கூட்டணியில் உள்ளர்வர்களுக்கும் கருத்து சுதந்திரமும், உரிமையும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு 'வித்யா சேவா ரத்னா விருது' வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்துள்ள முதல்வரால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மிக குறைவாகவே பெற்று வந்துள்ளார். எனவே வெளிநாட்டு பயணம் 100 சதவீதம் தோல்வியில் முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட முதலீட்டை ஈர்க்கும் முயற்சி யில் தமிழக முதல்வர் தோல்வி அடைந்துள்ளார்.

வெள்ளை அறிக்கை கேட்டால் நக்கல் செய்கிறார். மக்களுக்கு தெளிவு படுத்தும் பணியை எதிர்க்கட்சிகள் தான் செய்யும். விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முடியுமா..? விதிமுறைகளையும், மரபுகளையும் மீறி நடந்து கொள்கிறார்கள், உதயநிதியை முன்னிறுத்தும் பணியாக உள்ளது. முதல்வரின் மகன் என்பதால் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்யலாம் என்ற தவறான முன்னுதாரங்களை ஏற்படுத்தக் கூடாது.

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கூறியது தவறில்லை. கூட்டணி என்பதை பேரறிஞர் அண்ணா தான் உருவாக்கி அனைவரது பங்கேற்பையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூட்டணியை ஏற்படுத்தினார். கூட்டணியில் உள்ளர்வர்களுக்கும் கருத்து சுதந்திரமும், உரிமையும் உள்ளது.

அன்னபூர்னா உணவகம் விவகாரம் குறித்து மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்ததே அதிகாரபூர்வ அறிவிப்பு தான். திருமாவளவன் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அதிமுக கூட்டணியில் இணைய எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் வேண்டும்.

புதிய கட்சிகள் வருகைக்கு வரவேற்கணும். மாநாடு நடத்த பாதுகாப்பு காரணங்களுக்காக பல நிபந்தனைகள் விதிப்பது வழக்கம் தான், ஆனால் மாநாடு நடக்கவே கூடாது என்பது போன்று நிபந்தனைகள் விதிக்கின்றனர். இது எதிர்காலத்தில் முன்னுதாரணமாக கூடும். திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போன விவகாரத்தில், கட்சி கூட்டங்களில் உணவுகள் வழங்கப்படும் போது கவனமாக கையாள வேண்டும், பசிக்கு உணவு வழங்கும் போது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விட கூடாது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+