அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் வீடியோ.. தப்புதான்.. மாநாட்டிலேயே வருத்தம் தெரிவிக்காதது ஏன்? அதிமுக மாஜி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிலேயே வருத்தத்தை பதிவு செய்வது நாகரிகமாக இருக்காது. பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையிலான வீடியோ ஒளிபரப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. அண்ணா இல்லையெனில் என்னை போன்றவர்கள் அரசியலுக்கே வந்திருக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்காக அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடந்து வந்தன. ஏராளமானவர்கள் தரிசித்து வந்தனர். நேற்று முருகன் மாநாடு நடந்தது. இதனால் நேற்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு திரண்டு வர தொடங்கினர்.

releasing-a-video-belittling-anna-at-madurai-murugan-conference-is-wrong-aiadmk-rajendra-balaji

மதுரை முருகன் மாநாடு

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதேபோல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாவை விமர்சித்து வீடியோ?

அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் கந்த சஷ்டி பாடல் பாடப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோன்று இந்து முன்னணி சார்பில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

அந்த வீடியோவில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் பரவின. மேலும் அந்த மாநாட்டில் பங்கேற்று இருந்த அதிமுகவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

வருத்தமளிக்கிறது, தவிர்த்து இருக்கலாம்

மதுரையில் நேற்று நடந்த முருகன் முருக பக்தர்கள் மாநாட்டிலேயே வருத்தத்தை பதிவு செய்வது நாகரிகமாக இருக்காது. பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையிலான வீடியோ ஒளிபரப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. அண்ணா இல்லையெனில் என்னை போன்றவர்கள் அரசியலுக்கே வந்திருக்க முடியாது. அந்த வீடியோவை தயாரித்தவர்கள் யார் என்று தெரியாது.

ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற 99 சதவீத நல்ல நிகழ்வுகளை பற்றி நாம் பேசுவோம்.. அதில் நடந்த ஒரு நிகழ்வை பற்றி பேசி அந்த மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் புறக்கணிக்க முடியாது. அண்ணாவை புறக்கணிப்பது போல.. வஞ்சிப்பது போல வீடியோ வந்திருப்பது வருத்தமளிக்கிறது. அதனை தவிர்த்து இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் மறைந்த தலைவர்களை பற்றி நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவது தான் சரியாக இருக்கும்.

அதிமுக பக்கம் விஜய் வர வேண்டும்

அவர்களிடத்தில் இருக்கின்ற முற்போக்கான கொள்கைகளை பற்றி அந்த நேரத்தில் அவர்கள் எடுத்த முடிவுகளை பற்றி இப்போது விமர்சனம் செய்வது தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையற்றது. இவ்வாறு அவர் கூறியிருந்தார். மேலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவுக்கு பக்க பலமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருக்க வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+