துரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு
திருப்பரங்குன்றம்: மக்களின் எதிர்ப்பால், அமைச்சர்கள் பலர் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர் என்றார்.

இடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்கு தான் இதனை சொல்வதாகவும் விளக்கமளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications