மதுரையைக் கலக்கிய ரவுடி செளந்தரபாண்டி.. மாமா வீட்டில் தூங்கியபோது சரமாரி வெட்டிக் கொலை
மதுரை: மதுரை முத்துபட்டி அய்யனார்புரம் 4வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சௌந்தரபாண்டி (வயது 43) தலை துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, அடிதடி கட்டப்பஞ்சாயத்து, என தமிழகம் முழுவதும் 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. நேற்று மதியம் சௌந்தரபாண்டி அவருடைய மாமா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் 5 பேர் தூங்கிக்கொண்டிருந்த சௌந்தரபாண்டியன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

அதேபோல் சம்பவத்தை தடுக்க வந்த சௌந்தரபாண்டியனின் உறவினரயும் ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சௌந்தரபாண்டியின் தலையை துண்டாக அறுத்து கையில் எடுத்துச் சென்று மதுரை வசந்த நகர் ரயில்வே தண்டவாளம் அருகே தூக்கி வீசி மர்ம கும்பல் தப்பி ஓடினர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சௌந்தரபாண்டியனின் தலையில்லா உடலை காவல் துறையினர் கைப்பற்றினர் தொடர்ந்து அவரது தலையை மர்ம கும்பல் வீசி சென்ற இடத்தில் அரை மணி தேடி கண்டெடுத்து உடற்கூறாய்வுகாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி பிடிப்பதற்கு ஐந்து பேர்கொண்ட காவல் தனிப்படையினர் அமைக்கப்பட்டு இருக்கின்றனர். மதுரையை பதற வைத்துள்ளது இந்த படுகொலைச் சம்பவம்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications