மதுரையில் போலீசிடம் தப்ப முயன்ற ரவுடி.. இரண்டு காலிலும் போடப்பட்ட மாவுக்கட்டு.. என்ன நடந்தது?
மதுரை: மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வினோத்குமார், போலீசாரிடம் தப்பிக்க முயன்று செல்லூர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நிலையில் இவரது கால்கள் முறிந்தன. தற்போது மாவு கட்டு போட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் ரவுடி வினோத் குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதாகும் வினோத் என்பவர் கடந்த டிசம்பர் 8-ந்தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையில் திருஞானசம்பந்தம், சூர்யா, உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியே ரவுடி வினோத்குமார் (25) தான் என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடிக்க செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் பதுங்கியிருந்த வினோத்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வினோத்குமார் அருள்தாஸ்புரம் களத்துபொட்டல் வயல் பகுதியில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததது. இதையடுத்து போலீசார் வினோத்குமாரை அழைத்து சென்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகளை கைப்பற்றினார்கள்.
பின்னர் வினோத்குமாரை அங்கிருந்து வேனில் ஏற்றிக்கொண்டு காவல்துறையினர் கடந்த டிசம்பர் 14ம் தேதி மாலை அழைத்து வந்தனர். அப்போது செல்லூர் தத்தனேரி எல்.ஐ.சி.பாலத்தில் சென்ற போது தனக்கு வாந்தி வருவதாக கூறியிருக்கிறார். உடனே போலீசார் அவரை வேனில் இருந்து கீழே இறக்கி உள்ளனர். அப்போது ரவுடி வினோத்குமார் போலீசாரிடமிருந்து தப்பித்து மின்னல்வேகத்தில் ஓடினார். போலீசார் துரத்திய நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் வினோத்குமார் பாலத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
அதில் அவரது 2 கால்களின் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில சேர்த்தனர். அவருக்கு இரண்டு கால்களிலும் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடி வினோத்குமார் மீது கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தான், அண்மையில் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளி வந்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த அன்றே, கொலையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி, கீழே விழுந்து படுகாயம் அடைந்து மாவு கட்டு போடப்பட்ட சம்பவம் மதுரையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications