மதுரை சம்பவம்.. ‘ஈ’-யால் ரூ.10,000 அபராதம்! விசாரணை வளையத்தில் ஆவின் பால் நிறுவன உதவி மேலாளர்
மதுரை: ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக பால் பேக்கேஜிங் செய்த நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பாலில் 'ஈ' மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அருவறுப்பு ஏற்பட்டு பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்து விளக்கமும் அளித்தது. கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் வாங்கி உபயோகப்படுத்தும் ஆவின் பாலில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பாலில் ஈ
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் இன்று காலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி இருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்து அந்த பால் பாக்கெட்டை கத்திரிக்கும் சமயத்தில் அதில் ஈ ஒன்று மிதப்பதை அவர் பார்த்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் வீடியோ
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஈ மிதந்த அந்த பால் பாக்கெட் திரும்பப் பெறப்பட்டு வாடிக்கையாளருக்கு புதிய பால் பாக்கெட் வழங்கப்பட்டது.

ஆவின் விளக்கம்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பேக்கிங் செய்யும் போது எதிர்பாராதவிதமாக இந்த தவறு நடந்துள்ளதாகவும், இனி எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காது எனவும் ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அபராதம்
இந்த பால் பாக்கெட்டை திரும்பப் பெற்று இதுகுறித்து விசாரணையும் நடைபெறுவதாக ஆவின் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆவின் உதவி மேலாளரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக பால் பேக்கேஜிங் செய்யும் நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications