"சேலைக்குள்ளே".. 50 வயசாகுது.. மதுரையையே அதிர வைத்த 2 பெண்கள்.. ஆடிப் போன போலீஸார்!
சேலை திருடிய பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை: கில்லாடி பெண்கள் ஜவுளிக்கடையில் செய்த சேட்டையை பார்த்து மதுரை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில், கடைத்தெருக்களில் கூட்டம் அலைமோதும்.. பல ஜவுளி கடைகளிலும் நெரிசல் மிகுந்த கூட்டம் காணப்படுவது இயல்பு.

இதனால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், அந்தந்த கடை ஊழியர்களும் சிசிடிவி கேமிராவில் கண்காணித்தபடியே இருப்பார்கள்.. பலர் அந்த வகையில் சிக்கியும் உள்ளனர்.
இப்போதும் பொங்கல் பண்டிகைக்கான பிஸியில் கடைகள் உள்ளன.. ஆனால், மதுரையில் ஒரு ஜவுளிக்கடையில் அவ்வளவாக கூட்டமே இல்லை.. கடைசியில் ஆட்கள் இருக்கிறார்கள்.. ஓனர் இருக்கிறார்.. சிசிடிவி கேமராக்களும் இருக்கின்றன.. இவ்வளவு இருந்தும் எதையுமே அந்த பெண்கள் கண்டுகொள்ளவில்லை.
மொத்தம் 4 பேர்.. மஹால் வடம்போக்கி தெருவில் உள்ளே இருக்கும் அந்த ஜவுளிக்கடைக்குள் நுழைகிறார்கள்.. ராமநாதன் என்பவர்தான் ஓனர்.. புடவை வாங்குவது போல 2 பெண்களும் 2 ஆண்களும் வருகிறார்கள்.. புடவைகளை எடுத்து ஒவ்வொன்றாக காட்டுகிறார்கள்.. ஆனால் அவர்கள் எதையுமே வாங்குவது போல தெரியவில்லை.
இதனால் தான் கடைக்காரர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அவர்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான் அந்த பெண்கள் புதுபுடவைகளை எடுத்து, தங்கள் சேலைக்குள் டக்கென ஒளித்து வைத்து கொண்டனர்.. கடைக்காரர்கள் அந்த பக்கமாக திரும்பி இருக்கும்போது, புடவைகளை எடுத்து சேலைக்குள் வைத்து கொள்கிறார்கள்.
இதை கடையில் இருந்தோர் கண்டுபிடித்துவிட்டனர்.. சிசிடிவி கேமிராவிலும் இது அப்படியே பதிவாகி இருந்தது.. கையும் களவுமாக அவர்களை பிடித்தபோது, 8 புடவைகள், அவர்கள் காலுக்கு அடியில் வந்து விழுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓனர், தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி 55, மோகன் 55, சுசி 55, செல்வி 49 என்பது தெரியவந்தது..
எல்லாருமே 50 வயதானவர்கள்தான்.. விசாரணையில் அவர்கள் அனைவரும் இதுபோல் கடைகளுக்கு சென்று சேலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்தது தெரியவந்தது. இப்போது 4 பேரும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications