போகிற போக்கில், பழ.கருப்பையாவிற்கு குட்டு வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Recommended Video

மதுரை: பழ.கருப்பையாவை விமர்சனம் செய்து தனது பேட்டியில் கருத்து தெரிவித்தார், அமைச்சர், ஆர்.பி.உதயகுமார்.
சர்கார் திரைப்படத்தில் முதல்வர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பழ.கருப்பையா. இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்.
ஆனால், 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, கட்சி தலைமையுடன் பழ.கருப்பையா முரண்பட்டார்.

அதிமுக எம்எல்ஏ
கட்சி தொடர்பான கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து, பழ.கருப்பையாவை, அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக, ஜெயலலிதா அறிவித்தார். இதைத்தொடர்ந்து பழ.கருப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் திமுகவில் இணைந்துள்ளார்.

பழ.கருப்பையா விளாசல்
இந்த நிலையில், சர்கார் திரைப்படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திவருவதை கண்டித்து ஊடகங்களில், பழ.கருப்பையா கருத்து தெரிவித்து வருகிறார். விஜய் நினைத்தால் அதிமுக அரசுக்கே ஆட்டம் காட்ட முடியும் என்றும், விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தெரிவித்தார்.

பதவி கிடைக்கவில்லை
இதுகுறித்து மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளிக்கையில், பழ.கருப்பையா தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை, சபாநாயகர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, வருத்தப்பட்டு, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு நீக்கப்பட்டவர். அவர் யோசித்து பார்த்து கருத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பழ.கருப்பையா மீது கோபம்
சர்கார் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் மட்டுமின்றி, பழ.கருப்பையாவும், அதிமுகவினர் கோபத்தை தூண்டியுள்ளார் என்பதை அமைச்சர் கருத்து பிரதிபலிப்பதாக உள்ளது.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications