சசிகலாவிற்கு ஆதரவாக.. இப்ப மதுரையிலும்.. அதிமுக மாவட்ட கவுன்சிலர் செய்த வேலையால்.. தலைமை ஷாக்
மதுரை: மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் பங்கேற்க மாட்டேன் ஒன்று சசிகலா ஒதுங்கி இருந்தார். ஆனால் அதிமுகவை மீட்கப்போவதாக தொண்டர்களிடம் அடிக்கடி பேசி வருகிறார். லாக்டவுன் முடிந்த பின் தொண்டர்களை ஊர் ஊராக போய் சந்தித்து பேசப்போவதாகவும் கூறி வருகிறார். நிச்சயம் தொண்டர்களை சந்திப்பேன். கட்சியை மீட்பேன் என்று சூளுரைத்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் வராத நிலையில், அவர் தொண்டர்களை குறிவைத்து களம் இறங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை, சசிகலா உடன் பேசும் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறது. இதுவரை பலரையும் நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்
இது ஒருபுறம் எனில் சசிகலாவின் செயலை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் முதல்முறையாக அஇஅதிமுகவுக்கு பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும் என விளாத்திகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக தீர்மானம்
இந்த சூழலில் சசிகலாவின் பல்வேறு ஆடியோக்களுக்கு பிறகு, அவர் நிச்சயம் அரசியலில் இறங்குவார் என்று தெரிந்த கொண்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாக மாறி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் சசிகலாவிற்கு எதிராக அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது,

சசிகலா ஆதரவு போஸ்டர்
மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணாதொழிற்சங்க செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கே.லெட்சுமிபதி ராஜன் என்பவர் சசிகலாவிற்கு ஆதரவாக "துரோகத்தை வீழ்த்த வரும் தியாகமே" என்ற வாசகங்களுடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், பெருங்குடி, அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

அதிமுக தலைமை ஷாக்
மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியுள்ளது. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை இவரது செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி சம்பவம் பூதாகரமாகி வரும் நிலையில் மதுரை சம்பவமும் ஒபிஎஸ்இபிஎஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications