Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் வழக்கு! 9 போலீஸ்காரர்களுக்கு.. ஒரே நேரத்தில் மரண தண்டனை இதுதான் முதல்முறை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: காவல்நிலைய மரணங்களை தடுக்க எவ்வளவோ சட்டங்கள் வந்தாலும், மரணங்களை தடுக்க முடியவில்லை. அப்படித்தான் சாத்தான்குளம் காவல்நிலைய மரணமும் நடந்திருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கு, தற்போது மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காவல்நிலைய மரணங்களுக்காக, காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது என்பது கொஞ்சம் ரேரான விஷயம். ஆனால், சாத்தான்குளம் வழக்கில், 9 காவலர்களுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதித்திருப்பது, முன்னெப்போதும் இல்லாத தீர்ப்பாகும்.

Sathankulam Case Judgement

கேரளத்தில் நடந்த சம்பவம்

சாத்தான்குளம் சம்பவம் போலவே, கேரளாவில் உதய்குமார் வழக்கும் காவல்நிலைய மரணத்திற்கு பெயர் பெற்ற வழக்காகும். கடந்த 2005இல் திருவனந்தபுரம் காவல்துறையால் திருட்டு சந்தேகத்தில், பிடித்து செல்லப்பட்ட உதய், கனமான இரும்பு பைப்பால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில், 2018இல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரு காவல்துறை அதிகாரிகளான கே. ஜித்குமார், எஸ்.வி. ஸ்ரீகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. காவல் நிலைய மரண வழ்கில், காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

வழக்கும் தண்டனைகளும்

அதேபோல மற்றொரு கேரள வழக்கான தாளிகேஸும் காவல்நிலைய மரணம் மற்றும் அதற்கான தண்டனை குறித்து கவனம் பெற்றிருந்தது. 1992இல் காசர்கோட்டில் காவல் நிலையத்தில் மது என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதில் விசாரணை நீதிமன்றம் சில அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்தாலும், மேல்முறையீட்டில் அவை பெரும்பாலும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில், சாத்தான்குளம் வழக்குக்கு முன்பு காவல் நிலைய மரண வழக்குகளில் பல காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டாலும், ஆயுள் தண்டனையே பொதுவாக அளிக்கப்பட்டது. பி. ராஜன் வழக்கு போன்ற சம்பவங்களிலும், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையே விதிக்கப்பட்டது.

முந்தைய தீர்ப்புகள்

தமிழகத்தில் சாத்தான்குளம் வழக்கை போல, ராஜன் வழக்கும் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. இந்தச் சம்பவம் 1998-99 காலகட்டத்தில் நடைபெற்றது. சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர், ஒரு நிலத்தகராறு தொடர்பாக கியூ பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

சிபிஐ வழக்கு

ராஜன் லாக்-அப்பில் இருக்கும்போது கடுமையான சித்தரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் ரகசியமாக அப்புறப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ராஜனின் மனைவி ராஜம்மாள் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல ஆண்டுகள் நீடித்தது. உள்ளூர் போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லாததால், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் ராஜன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

வழக்கும் இழப்பீடும்

ஆனால் இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆணையர் உட்பட முக்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், பாதிக்கப்பட்ட ராஜம்மாளுக்கு அரசு தரப்பில் பெரும் தொகை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வித்தியாசமான வழக்கு

இந்த அனைத்து வழக்குகளிலிருந்தும், சாத்தான்குளம் வழக்கு வித்தியாசமானது. காரணம், பல குற்றவாளிகளுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இது மாதிரியான வழக்குகளில், வழக்கமாக, ஒன்று அல்லது இரண்டு முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டுமே மரண தண்டனை கிடைக்கும். ஆனால், இங்கே ஆய்வாளர் முதல் காவலர் வரை 9 அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியான அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், இக்குற்றத்தை நீதிமன்றம் கொடூரமானது என்றும் வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு எனவும் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. மரண தண்டனை வழங்க அரிதிலும் அரிதான என்ற சட்டபூர்வக் குறியீடு பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது சாத்தான்குளம் தீர்ப்பின் தீவிரமான தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+