சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி! நீதிமன்றம் அதிரடி!
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் காவல் மரண வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாற அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி, மரக்கடை வியாபாரி ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜூன் 22 ஆம் பென்னிக்ஸும், ஜூன் 23-ல் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து, சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது. ஸ்ரீதர் உட்பட ஒன்பது காவலர்கள் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீதர், சாத்தான்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளராக இருந்தவர். சிபிஐ விசாரணையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை இரவு முழுவதும் தாக்க உத்தரவிட்ட முக்கிய குற்றவாளியாக அவர் அடையாளம் காணப்பட்டார். மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கைகள், இருவரும் பலத்த காயங்களால் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் காவல் மரண வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாற அனுமதிக்கக் கோரி, மதுரை முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்டவரின் மனைவி செல்வராணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஜூலை 24 அன்று நடந்த விசாரணையில், சிபிஐ, "ஸ்ரீதர் முக்கிய சதிகாரராக இருந்தவர், அவருக்கு எந்தவித பரிவும் காட்டக் கூடாது" என்று வாதிட்டது. செல்வராணியும், ஸ்ரீதரின் மனுவை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
மதுரை முதல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி ஜி. முத்துக்குமரன இன்று தீர்ப்பளித்தார். ஸ்ரீதரின் மனுவை நிராகரித்து, வழக்கு விசாரணை முடிவு நிலையில் உள்ளதால், அவரை அப்ரூவராக ஏற்க முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஸ்ரீதர், இதற்கு முன் ஏழு முறை ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் அனைத்து மனுக்களும் குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நிராகரிக்கப்பட்டன. தற்போது, ஸ்ரீதர் உட்பட ஒன்பது குற்றவாளிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications