திமுக கூட்டணியில் எத்தனை சீட்? பிரஸ் மீட்டில் படபடவென கமல்ஹாசன் கொடுத்த ரிப்ளை!
மதுரை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, மநீம தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். “ஒற்றுமையும், நோக்கமும்தான் கூட்டணியில் முக்கியமான விஷயம். அவை எங்களுக்குள் தெளிவாகவே உள்ளது. ” என கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அந்த குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளின் எண்ணிக்கையையும், எந்தெந்த தொகுதிகள் என்பதையும் முடிவு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், 'காந்தியை மறவோம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி மதுரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடக்கிறதா? எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், “கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதில் கடமை தான் உள்ளது. இதை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை உள்ளது.
எத்தனை தொகுதிகள் கேட்போம் என இப்போது சொல்ல முடியாது. எப்படியும் நாங்களே வெளியிடுவோம். ஒற்றுமையும், நோக்கமும்தான் தான் கூட்டணியில் முக்கியமான விஷயம். அவை எங்களுக்குள் தெளிவாகவே உள்ளது. இதை நோக்கியே நகர்கிறோம்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவதாக வெளியாகி வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கூட்டணிக்கு அனைவரும் வருக... தமிழகம் வெல்க” எனத் தெரிவித்துவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications