நடிக்கும் போது நோட்டை கொடுக்கனும்..நிறுத்தினால் நாட்டைக் கொடுக்கனுமா? ரைமிங்காக விஜயை விளாசிய சீமான்
மதுரை: ஒப்பனையை (மேக்கப்) அழித்த உடனே அரியணை கேட்கும் நீங்கள், நீங்கள் நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு. வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத இந்த விபத்து இங்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது? அரசியல் என்பது வாழ்வியல். முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜயை விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் தலைவர் விஜயை பார்க்க செல்கிறார்கள். தம்பி விஜய் அவர்களே குறிப்பிட்டுள்ளார் வரலாறு திரும்புகிறது என்று.

சீமான் விமர்சனம்
முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், கக்கன், காமராஜர் உள்ளிட்ட பெரும் அறிஞர்கள் ஆட்சி செய்த மண் நல்லாட்சி மலர வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும்போது, இது வேற பக்கம் திசை திரும்பி செல்கிறது. கல்வி அரசியலை கற்பிக்கவில்லை.. ஒழுக்கம் நெறிமுறைகளை கற்று தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது. கலையை போற்ற வேண்டியது தான் கலைஞர்களை பாராட்ட வேண்டியதுதான்.
விஜய் நடிப்பு அரசியல்
நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற தகுதிகள் வந்துவிடும் என்ற நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு. போகப் போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்று தான் பார்க்கிறோம். ஒப்பனையை அழித்த உடனே அரியணை. நீங்கள் நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு. நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு. இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா..?
கரூர் சம்பவம் பதில்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடிப்பு இருக்கிறது. இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழ வேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சிலைக்கு மாலை அணிவதற்காக வருகை தந்த நிலையில் காவல்துறையினர் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு அறிவுறுத்தினர்.
சீமான் கோபம்
இதனால், சட்டென கோபமடைந்த சீமான் அதற்கு ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் பேசும் நேரத்தில் முடித்து விடுவேன் என கூறினார். தொடர்ந்து காவல்துறையினர் மாறி மாறி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கோபத்துடன் ஒரு நிமிடத்திலேயே பேட்டியை முடித்துவிட்டு சிவகங்கை புறப்பட்டு சென்றார் சீமான்.












Click it and Unblock the Notifications