“திருமாவளவனால் திமுகவிடம் பொது தொகுதியை கேட்க முடியுமா?” சீமான் கேள்வி
சென்னை: எம்ஜிஆர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இது குறித்து பேசிய சீமான், "திருமாவளவனால் திமுகவிடம் பொது தொகுதியை கேட்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்ஜிஆர் குறித்தும், ஜெயலலிதாவை அரசியல் களத்திற்கு அவர் அழைத்து வந்தது குறித்தும் திருமாவளவன் பேசியிருப்பதை ரத்தத்தின் ரத்தங்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. நேரடியாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் கருத்துக்கு விமர்சனங்களை அடுக்கியுள்ளார். இந்நிலையில், சீமான் திருமாவளவன் குறித்து பேசியது கவனம் பெற்றிருக்கிறது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது, "இது தமிழ்நாடு தானே! தமிழர்களால் வாக்கு செலுத்தி அமைக்கப்பட்ட அரசு தானே! இங்கே திராவிட மாடல் எங்கிருந்து வருகிறது? நாடு முழுவதும் மொழி வழி தேசிய இனங்கள் இருக்கும்போது, நாம் மட்டும் மரபு வழி இனம் என்று சொன்னால் எப்படி? தமிழர் ஆட்சி, தமிழர் அறம் சார்ந்த ஆட்சி, தமிழர்களின் ஆட்சி என்று சொல்ல முடியவில்லை உங்களால்.
இவர்கள் திராவிட ஆட்சி கூட என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அதற்கு பதிலாக திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் சொல் கிடையாது. அது சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டது. மாடல் என்பது ஆங்கிலம் திராவிட மாடல் ஆட்சி என்றால் எப்படி
தமிழ் தேசியம் என்று நாங்கள் பேசும்போது எதிர்ப்பவர்கள் யாரோ அவர்கள்தான் எங்கள் எதிரி. இப்போது நான் பேசியதை 2006க்கு முன்னர் பேசியது யார்? எங்கள் அண்ணன்தான் (திருமாவளவன்). பத்திரிகையாளர்கள் முன்பு கை கட்டி இப்போது பேட்டியளித்துக்கொண்டிருக்கிறேன். இதேபோல அண்ணன் பேசும்போது கை கட்டி பின்னால் நின்றிருந்தேன்" என்று கூறினார்.
இதனையடுத்து எம்ஜிஆர் பற்றி திருமாவளவன் கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், "பிராமண எதிர்ப்பு காட்டி திராவிட இருப்பை கட்டியவர்கள் இவர்கள். இதே வீரமணி, சமூக நீதி காத்த வீராங்கனை என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு செங்கோல் கொடுத்தாரே! பெரியார், அண்ணா வழியில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்யாததை அம்மையார் ஜெயலலிதா செய்தார்களே!
பொது தொகுதியில் ஒரு ஆதி தமிழ் மகனை நிறுத்த முடிகிறதா? அண்ணன் ஆ.ராசா பெரம்பலூர் தொகுதியில் நிற்கிறார். அது பொது தொகுதியாக மாறுகிறது. அப்படி மாறிய பிறகு ஆதி திராவிடர்கள் மட்டுமே வாக்களித்துதான் அண்ணன் வென்றாரா? எல்லா சாதியினரும் சேர்ந்துதானே வாக்களித்தார்கள்? ஆனால் ஏன் கருணாநிதி, நீலகிரியில் ஆ.ராசாவை நிற்க வைத்தார்?
பக்கத்தில் இருக்கும் திருச்சியில், தலித் எழில்மலை என்பவரை பொது தொகுதியில் நிறுத்தி ஜெயலலிதா வெற்றி பெற வைக்கவில்லையா? அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை சபாநாயகராக மாற்றவில்லையா? நான் உட்பட அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்கிற உயரத்தில் அருந்திய சமூகத்தினரை அமர வைக்கவில்லையா?
தனபால் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொன்னபோது, உன்னை உணவுத்துறை அமைச்சராக்குகிறேன் என்று ஆக்கவில்லையா? இதெல்லாம்தானே மாறுதல். அதைகூட நீங்கள் செய்யவில்லையே! இந்த தேர்தலிலாவது பொது தொகுதியில் நிறுத்துவார்களா! ஒரு பொது தொகுதியை திமுகவிடமிருந்து கேட்டுப்பெற அண்ணன் திருமாவளவன் என்ன பாடு படுகிறார்! ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். ஒரு நாள் இருவரும் கட்டிப்பிடித்து கைகுலுக்கி சங்கமிப்பார்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்" என்று கூறியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications