மோடி மீண்டும் பிரதமரானால் நாம் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்.. சீமான் பொளேர்!
மதுரை: மோடி மீண்டும் பிரதமராக வந்தால், அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டி இருக்கும், இந்தியாவில் யாரும் வாழ முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலையின் நடை பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், நடைபயணம் மேற்கொண்டால் ஏதாவது தாக்கம் ஏற்படும் என பாஜக நம்புகிறது, எல்லா தலைவர்களும் இப்படி நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகி விட்டது, திராவிட மாடல் குஜராத் மாடல் போல் நடைபயணம் என்பது ஓல்டு மாடல். இதற்கு முன்பு வைகோ குறுக்க மறுக்க நடந்து முடித்து விட்டார், ராகுல் காந்தி நடந்து முடித்துவிட்டார் எனத் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை ஆளுநர் ஆர்,என்.ரவியை சந்திப்பது குறித்தும் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளபோது அவர்களுடைய சொத்துப்பட்டியலை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை?
அண்ணாமலை நேர்மையானவர் என்றால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டியதுதானே? அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவர்களை பாஜக புனிதமாக்குகிறது. திமுகவை பற்றி மட்டும் அண்ணாமலை பேசுவது அரசியல் லாபத்திற்காகதான் என விமர்சித்தார்.
மேலும் பேசிய சீமான், கோடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை? 24 மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூட மின்சாரம் துண்டிக்கப்படாத கோடநாட்டில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது எப்படி? 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதைப்பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சியிலும் மணிப்பூரில் ஏற்பட்டது போன்ற கலவரங்கள் நடைபெற்றன. குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர். இப்போது எதிராக பேசுகின்றனர். தற்போது மணிப்பூர் கலவரத்தை வைத்து காங்கிரஸ் புனிதர் வேடம் போடுகிறது. மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஆளும் பாஜக அரசு விரும்புகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து என்.எல்.சி நிலம் கையகப்படுத்துகிறது. விவசாயிகளை இந்த மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள். என்.எல்.சி அமைக்கிறார்கள். இது நல்லதா? விவசாயங்களை அழிப்பது ஏற்புடையது அல்ல.
மேலும் பேசிய சீமான், தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜகவால் வளர முடியவில்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார். பிரதமர் மோடி தொடர்ந்து பாரதியார் திருவள்ளுவர் மற்றும் அவ்வையார் குறித்து பேசி வருகிறார். மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் பிரதமர் போட்டியிடுகிறாரே என்ற அதிர்வு ஏற்படும் என பாஜக எதிர்பார்க்கிறது.
சந்திரயான் விண்கலம் பற்றி மோடி பாராட்டி பேசி வருகிறார். அங்கே குடியேற நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா? முஸ்லிம்களையா? கிறிஸ்தவர்களையா என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். மீண்டும் பிரதமராக மோடி வந்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும், இந்தியாவில் யாரும் வாழ முடியாது என்று தெரிவித்தார்.
-
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications