துக்ளக்கை உங்க ரசிகர்களுக்கு குடுங்க.. உங்க படம் ஓடனும்னு மண்சோத்தை தின்னுட்டிருக்கான்.. சீமான் நச்
ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து சீமான் கிண்டல் செய்து பேசியுள்ளார்
மதுரை: "நான் என்ன சொல்றேன், முதல்ல அந்த துக்ளக்கை வாங்கி உங்க ரசிகர்களுக்கு எல்லாம் குடுங்க.. ஏன்னா அவன்தான் உங்க படம் ஓடனும்னு தரையில சோறு போட்டு தின்னுட்டு இருக்கான்.. நாங்க தட்டுல சாப்பிடும்போதே கண்ட கண்ட நோய் வந்துடுது!" என்று நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் சர்ச்சை பேச்சுக்கு சீமான் பதிலடி தந்துள்ளார்.
இன்னும் ரஜினி விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை.. ரஜினி என்றாலே கொதித்தெழுந்துவிடும் சீமான், இப்போதும் துக்ளக் விவகாரத்தை மதுரை பொதுக்கூட்டத்தில் கிண்டி, ரஜினியை விமர்சித்துள்ளார். சீமான் பேசியதில் இருந்து ஒருசில:
"முரசொலி வெச்சிருக்கிறவர் திமுக... துக்ளக் வெச்சிருக்கிறவர் அறிவாளி... நான் என்ன சொல்றேன், முதல்ல அந்த துக்ளக்கை வாங்கி உங்க ரசிகர்களுக்கு எல்லாம் குடுங்க.. ஏன்னா அவன்தான் உங்க படம் ஓடனும்னு தரையில சோறு போட்டு தின்னுட்டு இருக்கான்.. நாங்க தட்டுல சாப்பிடும்போதே கண்ட கண்ட நோய் வந்துடுது!

ராணுவம்
வன்முறை எதற்கும் தீர்வு இல்லை என்று சொல்லும் ரஜினி நடித்த எல்லா படமும் வன்முறை படம் தான். ஆயுதம் எதற்கும் தீர்வு இல்லை என்றால் ராணுவத்தை கலைத்துவிடுங்கள். ரஜினியை வைத்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது.. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேட்டால் ரஜினியிடம் பதில்லை.. ஆனால் ரஜினி முதல்வராக துடிக்கிறார்.

வன்முறை படங்கள்
தூத்துக்குடியில் ஏன் அப்படி பேசினார்? வன்முறை எதற்கும் தீர்வு இல்லை என்று சொல்லும் ரஜினி நடித்த அனைத்து படமும் வன்முறை படம்தான்.. ஆயுதம் எதற்கும் தீர்வு இல்லை என்றால் ராணுவத்தை கலைத்து விடுங்களேன்.. காவல்துறையிடம் துப்பாக்கி எதற்கு? குருவி சுடவா? தடி எதற்கு? கொசு அடிக்கவா?" என்று சீறினார்.

பழனிபாபா
தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பேசி வந்த சீமான் பழனிபாபா குறித்து பேசினார். "பழனிபாபாவை தீவிரவாதிகள் என்று சொல்லாதீங்க.. அவரை தீவிரவாதிகள் என்று ஏற்கக்கூடாது.. பயங்கரவாதத்திற்கும், தீவிரவாத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ரெண்டையும் வெவ்வேறு பொருள், வெவ்வேறு சொற்கள்.. அதனால் ஒன்று என்று அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது.

பயங்கரவாதி
பழனிபாபா ஒரு தீவிரவாதி என்றால் சீமானும் தீவிரவாதிதான்.. ஏனென்றால் நாங்கள் எங்கள் கருத்தை, கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்போம்.. பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தி இருந்தால் அது தீவிரவாதம்.. ஆனால் கருத்தால் வெல்ல முடியாமல் கத்தியால் வெட்டி வீழ்த்திய செயல்தான் பயங்கரவாத செயல்" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications