தவெக மாநாட்டை விடுங்க.. நாதக மாநாட்டில் கூடப்போகும் கூட்டத்தை பாருங்க.. விஜய்யை சீண்டிய சீமான்!
மதுரை: பிப்ரவரி 7ல் நாம் தமிழர் கட்சியின் மாநாடு திருச்சியில் நடக்கும் என்று சீமான் அறிவித்துள்ளார். அந்த மாநாட்டின் மூலமாக ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும், எப்படி உரையாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று கூறிய சீமான், தேர்தல் நெருங்குவதால் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை விஜய் அங்கிள் என்று அழைத்தது சர்ச்சையாகியது. ஆனாலும் சமகால பிரச்சனையை பற்றி விஜய் பேசாமல், வழக்கம் போல் திமுகவை மட்டும் அட்டாக் செய்தது எந்த அரசியல் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் எடுபடவில்லை.

இதனிடையே கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தவெக தொண்டர்களை அணில்ஸ் என்று அழைத்து கிண்டல் செய்வதோடு, விஜய்யையும் ஆவேசமாக விளாசி வருகிறார். தற்போது விஜய்யின் பேச்சிற்கு சீமான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் சீமான் பேசுகையில், தவெக மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்க்கத் தேவையில்லை.. நான் ஒருவன் அரசியல் கட்சி மூலமாக 36 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றுள்ளேன்.. பிப்.7ல் நான் ஒரு மாநாடு போடுகிறேன்.. அங்கு வரும் கூட்டத்தை பாருங்கள்.. மாநாடு எப்படி நடத்த வேண்டும்.. மாநாட்டில் எப்படி உரையாற்ற வேண்டும், எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை பாருங்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால், ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும். பதவி, கோடி கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. அதேபோல் அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது.. அது ஜங்கிள் ஜ்ஹங்கிள் என்று தானே கத்த வேண்டும். அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது ஏன் கேட்கவில்லை.
கடந்த மாநாட்டில் சிஎம் சாராக இருந்தவர், இப்போது எப்படி அங்கிளாக மாறினார்? தேர்தல் வருவதால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறி இருக்கலாம்.. விநாயகர் நமது ஆள் தான்.. அவரை வாழ்த்துவிட்டு போவதில் எந்த தவறும் இல்லை. பாதுகாப்புக்கு பவுன்சர்கள் எதற்கு? நாளை மக்களை எப்படி சந்திப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை கூட்டணிக்கு அழைத்தார். அப்போது கூட நான் கூட்டணிக்கு செல்லவில்லை. நான் கூட்டணிக்கு சென்றால், என்னுடைய தம்பிகள் என்னைவிட்டு சென்றுவிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சினிமாவில் இருந்த போதே விஜய் ரசிகர்களை அணில்ஸ் என்று அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். தற்போது அரசியலுக்கு வந்தபின் பொதுவெளியில் அணில்ஸ் என்று அரசியல் கட்சியினரும் கிண்டல் செய்வது தவெக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய்












Click it and Unblock the Notifications