யாரு சசிகலா! எம்ஜிஆருக்கு?.. நாட்டுக்கு தேவையானதை கேளுங்க சார்.. பிரஸ் மீட்டில் டென்ஷனான செல்லூரார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை கூறினாரா? நாட்டுக்கு தேவையானதை கேளுங்க என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ படுடென்ஷனாக பதில் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியுடன் கடந்த வியாழக்கிழமை சசிகலா பேசிய ஆடியோ வெளியானது. இதில் பேசிய சசிகலா, "மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நான் ஆலோசனைகள் கூறி இருக்கிறேன்.

கட்சி தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர். கருத்து கேட்பார் என கூறியிருந்தார். நான் சொல்லும் கருத்துக்களை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்பார்.

நன்றாக இருக்கும்

நன்றாக இருக்கும்

எம்.ஜி.ஆர் பேசும் போது எப்படியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நான் அறிவுரை வழங்கி இருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது என்று பேசி இருந்தார். இது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி எம்ஜிஆர் ரசிகர்களையும் கோபமடைய செய்தது.

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

இதுகுறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எம்ஜிஆருக்கு ஆலோசனை கொடுத்ததாக சசிகலா கூறியிருந்தாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபர்கள் கேட்டிருந்தார்கள்.

Recommended Video

    எப்படி பேசணும்னு எம்.ஜி.ஆருக்கே சொல்லிக் கொடுத்திருக்கேன்| Sasikala New Audio
    செல்லூர் ராஜூ

    செல்லூர் ராஜூ

    அப்போது திடீரென கோபமடைந்தார் செல்லூர் ராஜூ. சசிகலாவால் அதிமுகவில் பிளவு ஏற்படுமா என கேட்ட போது செல்லூராரை மேலும் சூடாக்கியது. உடனே அவர் நாட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேளுங்க சார் என பதிலளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    ஊடகங்கள்

    ஊடகங்கள்

    ஜனநாயகத்தின் 4ஆவது தூணாக உள்ள ஊடகங்கள் இது போன்ற தேவையற்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என அறிவுறுத்தினார். தெர்மாகோல் சயின்டிஸ்ட், வில்லேஜ் விஞ்ஞானி என கிண்டல் செய்த போதெல்லாம் அதுகுறித்த கேள்விகளை புன்முறுவலுடன் கையாண்ட செல்லூரார், சசிகலா குறித்த கேள்விக்கு கொதிப்படைந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+