மதுரை மண்ணின் விஞ்ஞானி செல்லூர் ராஜுவுக்கு வெற்றி வாய்ப்பு
மதுரை : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Recommended Video

இதில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இதுவரை 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக.,வில் அமைச்சர் பலர் பின்னடைவையும், தோல்வியையும் சந்தித்திருந்தாலும் சிலர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மதுரை மேற்கில் போட்டியிட்ட செல்லூர் ராஜூ 6000 க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இவரை எதிர்த்து இதே தொகுதியில் திமுக வேட்பாளர் சி.சின்னம்மாள் போட்டியிடுகிறார்.
வைகை நதியை ஒரு வருடத்தில் தேம்ஸ் நதியாக மாற்றிக் காட்டுவேன். ஆனால் மதுரையை சிட்னியாக மாற்ற சில ஆண்டுகள் ஆகும் என அதிரடி பேட்டி கொடுத்து அசத்தியவர் செல்லூர் ராஜு. தெர்மாகோல் அமைச்சர் என பலரும் இவரை கேலி செய்தாலும் இந்த தொகுதியில் மக்களின் ஆதரவு இவருக்கு உள்ளது என்பதையே இன்றைய தேர்தல் முடிவு நிலவரங்கள் காட்டுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் பலர், தெர்மாக்கோல் விட்டும், துணி துவைத்தும் செல்லூர் ராஜுவை விமர்சித்தனர். ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது அக்மார்க் சிரிப்புடன் தேர்தல் பணியாற்றி வந்தார் செல்லூர் ராஜு.


Click it and Unblock the Notifications
