புரிஞ்சிக்கோங்க.. அண்ணாமலை அண்ணாமலைதான்.. 3 தடவை அடித்து கூறிய செல்லூர் ராஜூ!
மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணாமலைதான் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதுடன் நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது கூட்டணியை உறுதிப்படுத்துகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, வீர பாண்டிய கட்டபொம்மன் அந்நியர்களை விரட்டியடித்தது போல அதிமுக தமிழகத்திற்கு எதிரானவர்கள், விரோதம் செய்பவர்களை விரட்டியடிக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எந்த விதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

மதுரை
கடந்த எட்டு மாதமாக தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை.
பாரபட்சமான முறையில் மதுரையை பார்க்கிறார்கள்.
மதுரையில் சாக்கடை ஓடுகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மதுரை ஒரு மாநகராட்சி போல தெரியவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

அதிமுக போராட்டம்
அந்தப் பணிகளை முடுக்கி விட வேண்டும். மதுரையில் உள்ள அமைச்சர்கள் மதுரையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மதுரைக்கு நிதி ஆதாரத்தை பெற்றுக் கொடுத்து மதுரை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

ரூ 10 கோடி
திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் 10 கோடி ரூபாய்க்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருடைய தொகுதிக்கு மட்டும் எப்படி நிதி ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி ஒதுக்கியதா மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியதா என்பது பற்றி தெரியவில்லை. எங்கள் சட்டமன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுகிறதா?

தலைமை
குறுகிய கால சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றாலும் இது குறித்து கேள்வி எழுப்புவோம். அற்புதமான பாரத பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார். அவரை வரவேற்க வேண்டியது நம்முடைய எண்ணம். எங்கள் தலைமையின் எண்ணமும் அதுதான். அரசியல் கருத்துக்களை எங்கள் தலைவர்கள் பேசுவார்கள். திமுக ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிராக எதுவும் நடந்தால் முதல் குரல் ஆணித்தரமாக நாங்கள் தான் கொடுப்போம் என்று பேசினார்.

பாஜக தலைவர்
எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு,
அண்ணாமலை. அண்ணாமலை. அண்ணாமலை தான். அதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதிலிருந்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியா என தெரியவில்லை.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications