ரஜினியின் மகளுக்கு 2ஆவது திருமணம் செய்ய பெரியாரின் கொள்கையே காரணம்- சீண்டும் செல்லூர் ராஜு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரஜினியின் மகளுக்கு 2ஆவது திருமணம் செய்ய பெரியாரின் கொள்கையே காரணம் - செல்லூர் ராஜு

    மதுரை: ரஜினியின் மகளுக்கு 2 வது திருமணம் செய்ய பெரியாரின் கொள்கையே காரணம் என அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் பேட்டி அளித்தார்.

    மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது, முகாமினை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசினார்.

    மகாத்மா காந்தியை மறக்கக் கூடாது. அவர் தான் முதலில் கிராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர். இன்று பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக, துணைத்தலைவராக அமர்ந்திருக்கிறார்கள்.

    முதல்வர்

    முதல்வர்

    அதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் என்பதை வாழ்க்கையில் மறக்க கூடாது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழி தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவர் நமது முதல்வர்.

    அதிகாரம்

    அதிகாரம்

    அதே போல கிராமப்புறங்களிலிருந்து பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். பிரதமரே காசோலையில் கையெழுத்திட முடியாது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையெழுத்து இட கூடிய அதிகாரம் உள்ளது.

    ஜாக்கிரதை

    ஜாக்கிரதை

    இந்த சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. அவரையும் நாம் மறக்கக் கூடாது. தற்போது எது நடந்தாலும் மக்கள் உடனடியாக வாட்ஸ் அப்பில் செய்திகளைப் பரப்புகிறார்கள். அதனால் தலைவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    கருணாநிதி

    கருணாநிதி

    அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தேவையான பணிகளை நாம் செய்ய முடியும். இந்த நாட்டுக்கு சேவையாற்றியதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை நான் மறுக்க முடியாது.

    ரஜினி மகளுக்கு 2ஆவது திருமணம்

    ரஜினி மகளுக்கு 2ஆவது திருமணம்

    ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கைதான் காரணம் என்பதை அவர் மறக்கக் கூடாது. எப்போதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்.

    ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன?

    ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன?

    50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? துரைமுருகன் தான் திமுகவிற்கு தலைவராக வந்திருக்க வேண்டும். எங்களை குறை சொல்வதற்கு துரைமுருகனுக்கு எந்த அருகதையும் கிடையாது. ரஜினி மீது எங்களுக்கு எந்த மன வருத்தமும் கிடையாது. ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா, சட்டமன்ற தலைவர் பதவி கூட வழங்க மாட்டேங்கிறார் ஸ்டாலின் என்றார் செல்லூர் ராஜு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+