ப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி..அதான் மக்கள் அவருக்காக கவலைப்படவில்லை.. செல்லூர் ராஜு
மதுரை: ப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி. மேல் மட்டத்திலேயே அரசியல் செய்தவர். அதனாலேயே அவரது கைது தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் கூறினார்.
மதுரை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துப்பட்டியில் 27.80 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். விழாவில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நீர் நிலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது எனவும் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிமராமரத்து பணி தொடர்பாக தி.மு.க. எம்எல்ஏ சரவணன் கூறி வரும் புகார்கள் உண்மை என தெரிய வந்ததால் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மதுரை மாநகரில் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்கள் நடந்து வருவதை பார்க்கையில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என கூற முடியாது என்றார்.
இருந்தாலும் இளைஞர்கள் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜு. ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு, அவர் பணக்கார அரசியல்வாதி. மேல் மட்டத்திலேயே அரசியல் செய்தவர். அதனாலேயே அவரது கைது தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications