இங்க சுண்ணாம்பு, அங்க வெண்ணெய்யா? சமஸ்கிருத கல்வி.. மத்திய அரசு மீது சு.வெங்கடேசன் எம்.பி தாக்கு
மதுரை: ராமேஸ்வரத்தில் வேத, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமஸ்கிருத வேதபாடசாலைகளை உருவாக்குவதும், அதன் மூலம் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் கற்று தருவதும்தான் இந்த சமஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையத்தின் நோக்கமாகும். எனவே வேத கல்வியை ஊக்குவிக்க சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஏற்கெனவே மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதாவது, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்கள் புதியதாக ராமேஸ்வரம், பத்ரிநாத், துவாரகா ஆகிய நகரங்களில் அமைக்கப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பு. ராமேஸ்வரத்தை பொறுத்த அளவில் ஏற்கெனவே கடந்த 1965ம் ஆண்டு முதல் தேவஸ்தான பாடசாலை மூலம் சமஸ்கிருத வேதங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இது மூடப்பட்டது. இந்நிலையில்தான் இதே ராமேஸ்வரத்தில் புதிய சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் அமையும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
என்னதான் பிரதமர் நரேந்திர மோடி மேடைக்கு மேடை தமிழ் பெருமைகளை பேசினாலும், தமிழுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதியைதான் வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 2014-15ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஒரே ஒரு முறை கூட சமஸ்கிருதத்தை விட தமிழுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் அமையும் எனும் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, "தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய். செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது" என்று X சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
குறள்பீட விருது என்பது மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் அளிக்கப்படும் ஒரு விருதாகும். தமிழ் வளர்ச்சிக்காக இவர்கள் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications