Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த போலீஸ்காரர்.. இப்போ.. இங்கே.. உடனே வந்தாகணும்".. செக்ஸ் புகாருடன் கொந்தளித்த வள்ளி.. ஷாக்!

மதுரையில் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

மதுரை: 'ரமணா' படத்தில் விஜயகாந்த் சொல்வாரே அந்த மாதிரி சொன்னார் அழகு வள்ளி.. "அந்த போலீஸ்காரர்.. இப்போ.. இங்கே.. உடனே.. வந்தாகணும்" என்று!

மதுரை, அவனியாபுரம் பராசக்தி நகரை சேர்ந்தவர் அழகு வள்ளி.. 35 வயதாகிறது.. அவருக்கு சிலர் செக்ஸ் டார்ச்சரை தந்திருக்கிறார்கள் போலும்.. இந்த பாலியல் தொல்லையை தந்தது அவரது சொந்தக்காரர்கள் என்றும் கூறப்படுகிறது.

 sexual harassment issue madurai women did darna in madurai airport road

அவர்களிடம் சொல்லியும் கண்டித்தும் பார்த்த வள்ளி, ஒரு கட்டத்தில் மனமுடைந்துவிட்டார்.. ஸ்டேஷனுக்கு போய் புகார் தருவதை தவிர வேற வழியே இல்லை என்று முடிவெடுத்தார்.. அதன்படியே குடும்ப மானம் போனாலும் பரவாயில்லை என்று அவனியாபுரம் ஸ்டேஷனில் வந்து அந்த சொந்தக்காரர்கள் மீது புகார் தந்தார். ஆனால், அங்கிருந்த போலீசார் வள்ளியின் புகாரை வாங்க மறுத்துவிட்டார்களாம்.. அத்துடன் வள்ளியை பலமுறை அலைக்கழித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கடுப்பில் இருந்த வள்ளி, போலீஸ்காரர் இப்படி செய்வதால், டென்ஷன் ஆகிவிட்டார்.. அதனால், ஸ்ட்டிரைகா வில்லாபுரம் - ஏர்போர்ட் மெயின் ரோடு எம்எம்சி காலனி அருகே வந்தார்.. ரோட்டில் ஏகப்பட்ட வண்டிகள் போய் கொண்டிருந்தன.. இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் நடுரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்.

வள்ளிக்கு அந்த பக்கமும், இந்த பக்கமும் வண்டிகள் சென்று வந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு நடுவில் வள்ளி தர்ணாவில் ஈடுபட்டார்.. இது குறித்து தகவல் அவனியாபுரம் போலீசாருக்கு பறந்தது.. உடனடியாக அழகு வள்ளியை சமாதானப்படுத்த விரைந்து வந்தனர்.

ஆனால், வள்ளி அதை எதையுமே காதில் வாங்கவில்லை.."என்னை அலைக்கழிச்ச அந்த போலீசார் இப்போ, இங்கே வரணும்" என்று கெத்தாக சொன்னார்.. இதை கேட்டதும் போலீசார் ஆடிப்போய்விட்டனர்.. எப்படியோ சமரசம் செய்ய முயன்றும், வள்ளி தன் பிடிவாதத்தை விடவே இல்லை. வண்டியில் சென்று கொண்டிருந்த எல்லோருமே வள்ளியின் கெத்தை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே சென்றனர்.

இதையடுத்து, வள்ளி இப்படி நடுரோட்டில் உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவரது உறவினர்கள் தர்ணாவுக்கு ஆதரவு தர வந்தனர்.. அப்போது, அவர்களில் சிலரை கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இறுதிவரை பிடிவாதத்தை தளர்த்தி கொள்ளாத வள்ளியை, ஒரு ஆட்டோவில் வலுக்கட்டாயமாக அழகு வள்ளி ஏற்றி கொண்டு சென்றது போலீஸ்.. அதன்பிறகு போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.. தற்போது வள்ளி தந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+