”காமம்" என்ற உணர்வு பகுத்தறிவையே குருடாக்கிடும்! இச்சைக்கு அடிமையானால்.. ஐகோர்ட் மதுரைகிளை கருத்து
மதுரை: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு எதிராக இளைஞர் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பெண் மீதான காம உணர்வு ஆணுடைய பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது என்று கருத்து தெரிவித்து உள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

இதனை தொடர்ந்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து இருந்தது.
இந்த நிலையில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெண் மீது ஏற்படும் காம உணர்வு ஆண்களின் பகுத்தறிவு சிந்தனையையே குருடாக்கி விடுகிறது.
ஆண்கள் தங்களுடைய உடல் இச்சைக்கு அடிமையாகிவிடுவதால்தான் பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன." என்று கருத்து தெரிவித்தனர். அத்துடன் ஆயுள் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மணிகண்டன் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications