Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 வயசு குழந்தையை.. நாசம் செய்த தாத்தா, மாமா.. தாயும் உடந்தை.. மொத்தமாக அள்ளி சென்ற போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: 3 வயது பேத்தியின் பிறப்புறுப்பில் காயங்கள் நிறைய இருந்ததை கண்டு அதிர்ந்துவிட்டார் ஜெயந்தி.. பிறகுதான் தெரிந்தது, பேத்தியை சொந்த தாத்தாவே நாசம் செய்துள்ளார்.. போதாக்குறைக்கு மாமா வேறு சீரழித்துள்ளார்.. வெளியே சொல்லக்கூடாது என பெற்ற தாயே சூடு வைத்துள்ளார்! மொத்த பேரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை, திருப்பரங்குன்றம், பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி.. 48 வயசாகிறது.. இவரது மகள் காதல் திருமணம் செய்து கொண்டார்.. கணவனுடன் தனியாக வசித்து வருகிறார்.. அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

 sexual torture to 3 year old baby near madurai and grandpa arrested

சில தினங்களுக்கு முன்பு அந்த குழந்தை, பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள்.. அப்போது, பிறப்புறப்பில் காயங்கள் இருப்பதை கண்டார்.. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி, குழந்தையிடம் அதை பற்றி கேட்டுள்ளார்.. அதற்கு தாத்தாவும் மாமாவும் (அம்மாவின் உடன்பிறந்த தம்பி) இப்படி செய்தார்கள் என்று அந்த குழந்தை சொல்லி உள்ளது.

அதுமட்டுமல்ல, இதை வெளியே சொல்லக்கூடாது என்று பெற்ற தாயும் மிரட்டினாராம். இதை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு சூடு வைத்துள்ளனர்.. இதனால் அவளுக்கு உடம்பு சரியில்லாமலும் போயுள்ளது.. இதை எல்லாம் கேட்டு அதிர்ந்த ஜெயந்தி, உடனடியாக ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, விரைந்து வந்த போலீஸ் 60 வயசு தாத்தா கிருஷ்ணன், 31 வயசு மாமா பாலா, இதற்கு உடந்தையாக இருந்த பெற்ற தாய் கலையரசி என 3 பேரையும் கைது செய்தது. குழந்தையை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+