21 பெண்களா.. மதுரை அறநிலையத்துறை அதிகாரியை ஆடிப்போக வைத்த புகார்.. முன்னாள் செயல் அலுவலர் கைது
மதுரை: இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி குறித்து போலியாக பாலியல் புகார் தயார் செய்து, அதில் 21 பெண் ஊழியர்கள் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவில் முன்னாள் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெண் அலுவலர்கள், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக 44 வயதாகும் செல்லத்துரை இருக்கிறார். செல்லத்துரை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பு அலுவலராக இருக்கிறார். இந்தநிலையில் செல்லத்துரை மீது, மதுரை மண்டல இணை ஆணைய அலுவலகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும், 21 பெண் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதாக புகார் மனு ஒன்று சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவியது. அதில், பெண் அலுவலர்களின் கையெழுத்தும் போடப்பட்டு இருந்தால் அறநிலையத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இந்த புகார் பொய்யானது எனக்கூறி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இந்து அறநிலையத்துறை பெண் அலுவலர்கள், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரையும், இந்த பாலியல் புகாருக்கும் தனக்கும் தொடர்பில்லை என கூறியதுடன், அவதூறு பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசில் அவர் முறைப்படி புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் செயல்அலுவலராக ஏற்கனவே பணியாற்றிய ஜவகர் (60) என்பவர் தான் இதனை பரப்பியது என்பது தெரியவந்தது. சமீபத்தில் ஜவகரின் பணி, நடத்தை தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை விசாரணை நடத்தினார். அதில் புகார் மீது முகாந்திரம் இருந்ததால் ஜவகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். அதன்பேரில், ஜவகர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்ததால், ஓய்வு பெறவும் அனுமதியும் அளிக்கப்படவில்லை.
இதனால் அவர் செல்லத்துரைதான் மீது கோபத்தில் இருந்துள்ளார். அதன்காரணமாக, பாலியல் ரீதியான ஒரு புகாரை தயாரித்து செல்லத்துரையுடன் இணைத்து வாட்ஸ் அப் குழுவில் அவர் பொய்யாக பரப்பியதாக புகார் எழுந்தது. இதற்காக அவர், அறநிலையத்துறை மதுரை மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் 21 பெண் ஊழியர்களின் பெயர்களுடன், அவர்களின் கையெழுத்தையும் போலியாக பதிவிட்டு, போலியான புகார் மனுவை தயார் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார், ஜவகர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications