அடச்ச்சீ.. "நிர்வாண" இளைஞர் செய்த பகீர்.. டக்கென திரும்பி கொண்ட "லேடி டாக்டர்".. நம்ம மதுரையில்தான்
மதுரை: அரசு பேருந்தில் பயணம் செய்த ஆபாச பேர்வழியை போலீசார் தட்டி தூக்கி உள்ளனர்.. என்ன நடந்தது மதுரையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் அரைகுறையாக டிரஸ் செய்துகொண்டு பயணம் செய்தார்.. அந்த டிரஸ் பார்ப்பதற்கே படுமோசமாக இருந்தது.. நீச்சல் உடை அணிந்தபடியே, மெட்ரோவில் ஏறி உட்கார்ந்திருந்தார்..
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மெட்ரோவில், அதுவும் தலைநகரில், இப்படி ஒரு கோலமா? என்று அதிர்ந்து கேட்டார்கள் இணையவாசிகள்..

நீச்சல் டிரஸ்: இதற்கு பிறகு, மெட்ரோ சார்பில் ஒரு அறிக்கை வெளியானது.. "டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் சமூக அந்தஸ்து பேணும் வகையில் கண்ணியமான உடைகளை அணிந்து வருவார்கள் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் எதிர்பார்க்கிறது. இது போன்ற ஆடைகளை அணிந்து சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி, பிரிவு 59 இன் கீழ் கண்ணியமற்ற அநாகரீகமாக ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும்.. தான் விரும்பிய ஆடைகளை அணிவது என்பது தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும், பொது போக்குவரத்தில் இது போன்ற அநாகரிகமாக ஆடை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த வாரமே இன்னொரு கன்றாவி இதே டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்தது.
ஆபாச வீடியோ: இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது. கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் அந்த மெட்ரோ ரயிலில் அன்றைய தினம் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர், தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டிருந்தவர், டக்கென சுயஇன்பத்தில் ஈடுபட துவங்கிவிட்டார்..

ஆபாச படம்: இதை பார்த்த சில பெண் பயணிகள், அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து கொண்டு, தங்கள் இருக்கைகளை விட்டு வேறு இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டனர்.. இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இளைஞர் அந்தரங்க செயலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்ட டெல்லி மெட்ரோ நிறுவனமும், இன்னொரு அறிவிப்பினை வெளியிட்டது.
அதில், "பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட DMRC (டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்) மெட்ரோவில் உள்ள மற்றவர்கள் இதுபோன்ற விஷயங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். மெட்ரோவில் பயணிக்கும்போது பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்ற பயணிகள் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய நடத்தைகளைக் கண்டால், அவர்கள் உடனடியாக டிஎம்ஆர்சி ஹெல்ப்லைனுக்கு காரிடார், ஸ்டேஷன், நேரம் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்" என்று டிஎம்ஆர்சி கூறியிருந்தது.
மகளிர் ஆணையம்: ஆனாலும், இந்த விஷயத்தில், டெல்லி மகளிர் ஆணையம் தலையிட்டது.. ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், டெல்லி மெட்ரோவுக்கு இதுகுறித்து நோட்டீசும் அனுப்பியிருந்தார்.. அதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. இப்படி பொதுவெளி என்றும் பாராமல், சில ஆபாச பேர்வழிகளின் அட்டகாசங்கள் எல்லை மீறி கொண்டிருக்கின்றன.. காதலனின் மடியில் படுத்தபடி முத்தமிட்டு கொண்ட காதலியின் வீடியோ இன்னமும் வைரலாகி கொண்டிருக்கிறது. இதோ நம்முடைய மதுரையில் நேற்று நடந்த கொடுமையை பாருங்கள்.

நேற்றிரவு திருவனந்தபுரத்துக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.. அந்த பஸ்ஸில் பெண் டாக்டர் ஒருவர் பயணித்துள்ளார்.. அது 3 பேர் உட்காரும் சீட் ஆகும்.. அந்த இருக்கையில் ஜன்னலோரம் இளைஞர் உட்கார்ந்திருந்தார்.. அந்த இளைஞர் அருகில் பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.. ஆனாலும் கவலையின்றி, தன்னுடைய ஆடைகளை கழற்றியிருக்கிறார் இளைஞர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், வேறுபக்கமாக திரும்பி உட்கார்ந்து கொண்டார்..
மாமியார் வீடு : இதன்பிறகும்கூட, அந்த இளைஞர் தன்னுடைய ஆபாச நடவடிக்கைகளை நிறுத்தவில்லை... இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் டாக்டர், இளைஞரின் ஆபாச செய்கைகள் குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து பெண் மருத்துவர் முன்பு அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்ட அந்த இளைஞர் யார் என்ற விசாரணை ஆரம்பமானது.. அவர் பெயர் செல்வா.. மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இப்ப செல்வாவை "மாமியார்" வீட்டில் ஸ்பெஷலாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்...!!
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications