ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு தமிழக அரசு வேலை? அமைச்சர் உதயநிதி சொன்ன முக்கிய தகவல்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியின் வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி அதுபற்றி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்பட ஏராளமான வீர விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பொங்கலையொட்டி நடத்தப்படும் மதுரை ஜல்லிக்கட்டு என்பது உலகப்புகழ் பெற்றது.

மதுரையில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்பட்டு வருகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு என்பது நடந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து போட்டியை ரசித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி? அமைச்சர் மீது 2ம் இடம்பிடித்த வீரர் பரபர புகார்! என்ன நடந்தது
நான் அடிக்கடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளேன். ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு பிறகு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகையே கவர்ந்துள்ளது. இதனை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். மெரினாவில் மக்கள் இந்த போட்டியை மீட்டெடுக்க போராடினாலும், அலங்காநல்லூர் வாடிவாசலில்தான் முதல் முறையாக போராட்டம் தொடங்கியது.
ஐபிஎல் போட்டிகளை போல ஜல்லிக்கட்டு போட்டிகளையும் லீக் முறையில் ஆண்டு முழுவதும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்’’ என தெரிவித்தார். அதாவது மதுரையில் தற்போது நடந்து முடிந்த 3 புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
ஆனால் முதல் பரிசாக காரை வென்ற வீரர்கள் அனைவரும் கார் வழங்குவதற்கு பதில் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இத்தகைய சூழலில் தான் ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications