மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான்: தமிழகத்தில் ஆரம்பித்த கட்டுப்பாடு! தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுரையில் 18 இடங்களில் தடை

Google Oneindia Tamil News

மதுரை: புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்து விட்ட நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்று ஹேசியங்கள் சுற்றி வந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் வேறு மாதிரி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக உட்கட்சி தேர்தல்; எதிர்த்து நிற்க ஆளே இல்லை: ஓபிஎஸ்-இபிஎஸ் நாளை மனுதாக்கல் அதிமுக உட்கட்சி தேர்தல்; எதிர்த்து நிற்க ஆளே இல்லை: ஓபிஎஸ்-இபிஎஸ் நாளை மனுதாக்கல்

 மதுரை மாவட்டம் மோசம்

மதுரை மாவட்டம் மோசம்

மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும் 2ம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சு கருத்து

அமைச்சர் மா.சு கருத்து

எனவே, அடங்காத மதுரை பேன்ஸ் என்ற அடைமொழியுடன் போஸ்டர் ஒட்டியபடி தங்கள் ஆஸ்தான நடிகர்களின் படங்களை தியேட்டர்களில் பார்த்து வந்தவர்கள் இனிமேல் தடுப்பூசியை செலுத்துவது கட்டாயம். தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

ஓமிக்ரான் வைரஸ் பரவல்

ஓமிக்ரான் வைரஸ் பரவல்

தென் ஆப்ரிக்காவில் இருந்து பரவிய ஒமைக்ரான் வைரஸால் கர்நாடகாவுக்கு வந்த இருவர் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அங்கு 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மதுரை உட்பட 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒமைக்கரன் வைரஸ் கண்டறியும் கெமிக்கல் கிட் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மதுரையில் விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக மதுரை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை வசதி துவங்கியுள்ளது

கருவிகள்

கருவிகள்

ஆர்டிசிபிஆர் கருவியில் சளி சோதனை செய்யப்படுவதை போன்று ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனையும் செய்யப்படும். ஆனால், இதற்கு பயன்படுத்தும் ரசாயனம் மட்டும் மாறுபடுகிறது. இந்த கருவியில் ஒரே நேரத்தில் 96 சளி மாதிரிகளை 3 மணி நேரத்தில் கண்டறிய முடியும். இந்த வகை கெமிக்கல் கிட் இன்னும் சில தினங்களில் மதுரை செல்ல இருக்கிறது.

ராஜாஜி மருத்துவமனை

ராஜாஜி மருத்துவமனை

முன்னெச்சரிக்கையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு ஆக்ஸிஜன் மானிட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று குழந்தைகள் சிகிச்சை பெற 4 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஓமிக்ரானை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளாகும்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு 71 உட்பிரிவு (1)-ன் படி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

பொது இடங்கள்:

நியாய விலை கடைகள்

பள்ளி, கல்லூரிகள்

வியாபார நிறுவனங்கள்

விளையாட்டு மைதானங்கள்

சூப்பர் மார்க்கெட்

துணிக்கடைகள்

கடைவீதிகள்

திருமண மண்டபம் திரையரங்கம்

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தனியார்(ம)அரசு மருத்துவமனைகள்

தங்கும் விடுதிகள் டீ கடைகள்

ஹோட்டல்கள்

வங்கிகள்

· அரசு(ம)தனியார் அலுவலகங்கள்

போன்ற இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்பதும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Lockdown: Madurai district collector says people who are not vaccinated won't allow 18 types of places including theaters. Dindigul corporation too made an order like this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X