Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1,000 ஆங்கிலேயர் படையை அழித்த முதல் யுத்தம் நிகழ்ந்தது தமிழ்நாடு.. காரணமே இந்த கோவில்தான் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்தியாவை 200 ஆண்டுகளுக்கும் மேல் கட்டியாண்டிருக்கலாம் ஆங்கிலேயர்கள். ஆனால் இந்திய நிலத்தில் ஆங்கிலேயர் கால் பதித்த 1700களின் நடுப்பகுதியிலேயே 1,000 ஆங்கிலேயர் படையை அழித்த நிலம் தமிழ்நாட்டின் நத்தம் கணவாய்தான். இந்த யுத்தமே ஒரு கோவில் கொள்ளைக்கான பழிவாங்கல்தான் என்கிறது சரித்திரம். இந்த சரித்திரத்தில் இடம்பிடித்திருப்பதுதான் மதுரை மேலூர் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் (கோவில் குடி) என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தெரியும்; நாயக்கர்கள் தெரியும். மியானா என்பவரைப் பற்றி தெரியுமா? மதுரையை ஆண்ட மீனாட்சி ராணி, கடைசி நாயக்க மன்னர். மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளின் விஜயரங்க சொக்கநாதரின் மனைவிதான் மீனாட்சி. இவரது வளர்ப்பு மகனின் தந்தை திருமலையும் அரசாட்சியில் உரிமை உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. மதுரை அரசில் ஏற்பட்ட இந்த குழப்பத்தின் மூலமாக ஆற்காடு (நவாப்) இளவரசர் சப்தர் அலி, அவரது மருமகன் சந்தா சாகிப், ஆற்காடு நவாப் நண்பர் அலிகா ஆகியோர் கொண்ட படை மதுரையைத் தாக்கியது. அப்போது சந்தா சாகிப்பை திருமலையும் மதுரை மீனாட்சியும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள பேரம் பேசிப் பார்த்தனர். ஆனால் மதுரையை அரசாண்ட மகாராணி மீனாட்சி, சந்தா சாகிப் படையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட அங்கேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். இத்துடன் மதுரையை கட்டியாண்ட நாயக்கர் அரசாட்சி முடிவுக்கு வந்தது.

independence day 2024 independence day 2024

மதுரை மியானா: அப்போது மதுரை ஆளுநராக சந்தா சாகிப்பின் ஒரு சகோதர் புதா சாகிப் நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் ஆளுநராக சதக் சாகிப் என்ற மற்றொரு சகோதரர் நியமிக்கப்பட்டார். ஆனால் மதுரை திருமலையோ தஞ்சையை ஆண்ட மராத்தியர்களுடன் இணைந்து சந்தா சாகிபு, ஆற்காடு நவாப்பை அழிக்கிறார். இதற்கு பிரதிபலனாக மதுரை அரசாட்சியை திருமலை எதிர்பார்க்க மராத்தியர்களோ மறுத்து தங்கள் வசமாக்கினர். இது நிகழ்ந்தது 1740-ம் ஆண்டு. 1744-ம் ஆண்டு மதுரை மீண்டும் ஆற்காடு நவாப் வசமாகிறது. ஆனாலும் ஆற்காடு நவாப் மதுரை அரசாட்சியை சந்தா சாகிப்பின் சகா ஆலம்கான் முறியடிக்கிறார். அப்போதுதான் அதாவது 1752-ல் மதுரை நிர்வாகிகளாக ஆலம்கானால் மூவர் நியமிக்கப்படுகின்றனர் அவர்களில் ஒருவர்தான் மியானா.

கான்சாகிப் வருகை: இந்த காலகட்டத்தில் ஆற்காடு நவாப், மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டு பாளையங்களின் வரிவசூல் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கிறார். ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான், கான்சாகிப் என்ற மருதநாயகம் தலைமையில் பெரும் படை திரட்டி வருகிறார். இங்கிருந்துதான் கான்சாபிக் என்கிற மருதநாயகம் வரலாறு தொடங்குகிறது. அப்போது தென் தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா, கட்டாலங்குளம் மாவீரன் அழகுமுத்துகோன், நெற்கட்டும் செவல் பூலித்தேவர் உள்ளிட்டோ அரசாட்சி செய்து வந்தனர்.

Independence Day: பிரிட்டிஷ் படையை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கி.பி. 1755 'நத்தம் கணவாய் யுத்தம்'


மியான் தேடுதல் நடவடிக்கையும் கொள்ளையும்: மதுரையை கைப்பற்ற முயன்ற கான்சாகிப் மருதநாயகத்தின் ஆங்கிலேயப் படை தப்பி ஓடிய மியானை கைது செய்ய தீவிரமாக இறங்கியது. அப்போது மதுரை மேலூர் அருகே உள்ள கோவில்குடி கோவிலில் மியான் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கிறது. ஆனால் ஆங்கிலேயருக்கோ பெரும் ஏமாற்றம். மியான் அங்கிருந்தும் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கான்சாகிப் மருதநாயகம் தலைமையிலான ஆங்கிலேயப் படை கோவில்குடி சிலைகளை கொள்ளையடித்துக் கொண்டு தூக்கிச் சென்றது. அந்த கோவில்குடி கோவில், கள்ளர் ஜாதியினரின் குலதெய்வம். இதனால் அவர்கள் உக்கிரமாக ஆங்கிலேயப் படையுடன் மோதுகின்றனர். ஆனால் ஆங்கிலேயப்படை 100-க்கும் மேற்பட்ட கள்ளர்களை படுகொலை செய்துவிட்டு குலதெய்வ சிலையை கொள்ளையடித்துக் கொண்டு தெற்கே இருக்கும் பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்ய புறப்பட்டது. தெற்கே பூலித்தேவருடன் மோதி வெல்ல முடியாத ஆங்கிலேயப் படை 1755-ல் மதுரை திரும்பியது. மதுரையில் இருந்து திருச்சிக்கு செல்ல 1,000 பேர் கொண்ட ஆங்கிலேயர் படை புறப்பட்டது.

நத்தம் கணவாய் யுத்தம்: இந்த ஆங்கிலேயர் படை நத்தம் கணவாய் வழியாக குழு குழுவாக சென்றது. கோவில்குடி குலதெய்வ சிலையை மீட்பதற்காக கள்ளர்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற உளவுத் தகவலால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நத்தம் கணவாயில் குழு குழுவாக சென்ற அத்தனை ஆங்கிலேயர் படையையும் குழு குழுவாகவே கொன்றழித்தது கள்ளர் பெரும்படை. இந்திய நிலத்தில் ஆங்கிலேயர் படை முதலில் எதிர்கொண்ட பேரழிவு இதுதான். 1,000 ஆங்கிலேயப் படையை முதன் முதலில் அழித்தொழித்ததும் தமிழர் நிலம்தான். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரம் செறிந்த யுத்தம் நிகழ்ந்தது கிபி 1755-ம் ஆண்டு மே 29-ந் தேதி. இந்த வரலாற்றை கள்ளர்களின் நத்தம் கணவாய் யுத்தத்தை நேரில் அனுபவித்த ஆங்கிலேய தளபதி கேப்டன் ஜோசப் ஸ்மித் தமது வரலாற்றுக் குறிப்புகளில் பதிவு செய்திருப்பது இன்றைக்கும் சாட்சியமாகும்.

திருமோகூர் ஆலயம்: இத்தகைய சரித்திரத்துக்குரிய நத்தம் கணவாய் யுத்தத்தின் தொடக்கமான கோவில்குடிதான் திருமோகூர், திரும்பூர் என்றழைக்கப்படுகிறது. இன்றைக்கும் கம்பீரமாக காட்சிதரும் சாட்சாத் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்தான் ஆங்கிலேயர்கள் சூறையாடி கள்ளர் குலதெய்வத்தை கொள்ளையடித்த கோவில்குடி கோவில். பின்னாளில் மருது சகோதரர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட திருத்தலம். திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கே மருது சகோதரர்கள் புகழைப் போற்ற பெருஞ்சிலைகள் வடிவமைக்கப்பட்டும் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+