இன்று நள்ளிரவு முதல் மதுரையில் முழு ஊரடங்கு.. எவை இயங்கும், எவை இயங்காது? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி இரவு வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முழு ஊரடங்கு எந்த மாவட்டம் என்ற கேள்வி மக்களை துரத்த ஆரம்பித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், எது எது இயங்கும், எவை இயங்காது என்பது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Full lockdown districts in Tamilnadu : மதுரையில் முழு ஊரடங்கு.. எவை இயங்கும், எவை இயங்காது?

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மதுரையிலும், இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளதாக, திங்கள்கிழமையான நேற்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    எங்கெல்லாம் ஊரடங்கு?

    எங்கெல்லாம் ஊரடங்கு?

    மதுரை மாநகராட்சி பகுதி, பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மேற்கு ஊரகப் பகுதிகள், திருப்பரங்குன்றம் பகுதிகளில் மொத்தம் 7 நாட்களுக்கு, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இயங்கக் கூடியவை

    இயங்கக் கூடியவை

    மருத்துவமனை, மெடிக்கல்கள், ஆம்புலன்ஸ் சேவை போன்ற அத்தியாவசிய சேவைகள், கட்டுபாடுகளின்றி இயங்கும். அவசர மருத்துவ உதவிக்கு உரிய ஆவணங்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம். இ-பாஸ் உள்ளவர்களை ரயில்நிலையம் மற்றும் விமானநிலையத்திற்கு அழைத்து செல்ல அனுமதி உள்ளது. விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சென்று திரும்பும் ப்ரீபெய்டு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

    ஒரு கிலோமீட்டர் சுற்றளவு

    ஒரு கிலோமீட்டர் சுற்றளவு

    ஆட்டோ, கால்டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதிகபட்சமாக, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே மக்கள் பயணித்து அத்தியவாசிய பொருட்களை வாங்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியேற கட்டுபாடு விதிக்கப்படும்.

    ஆவின், குடிநீர் வசதி

    ஆவின், குடிநீர் வசதி

    மத்திய, மாநில அரசு அலுவலங்கங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். ஆனால், கட்டுபடுத்த பகுதிகளிலிருந்து ஊழியர்கள் பணிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்கூட்டியே அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்தால், கட்டுமான பணிகளுக்கு அனுமதி உண்டு. சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்துறை, கருவூலத்துறை, ஆவின், குடிநீர் ஆகியவை முழு அளவில் செயல்பட அனுமதி.

    மளிகை கடை, காய்கறி கடை, ஹோட்டல்கள்

    மளிகை கடை, காய்கறி கடை, ஹோட்டல்கள்

    காய்கறி கடை, மளிகை கடை பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். ஹோட்டல்களில், காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் வேலை செய்யலாம். டீ கடைகளுக்கு அனுமதி இல்லை. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அதற்கு பதில், அங்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும்.

    இ பாஸ் வழங்குவதில் கட்டுப்பாடு

    இ பாஸ் வழங்குவதில் கட்டுப்பாடு

    அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். தன்னர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அரசு அனுமதி பெற்றே மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி உள்ளது. நீதிமன்றம் செயல்படலாம். மதுரையிலிருந்து, இ-பாஸ் வசதி திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத்திற்கு மட்டுமே வழங்கபடும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+