Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிரியர் தினம்.. தேவதை அம்சம் நீயோ.. அன்பான ஆசிரியை.. அற்புத அனுபவங்களை பகிரும் கணித ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆசிரியைகள் கண் முன் உலா வரும் தேவதைகள்.. எல்லோருக்குமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் தேவதையாக ஒரு ஆசிரியை அவரது வாழ்க்கையில் கடந்து போயிருப்பார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எம்எஸ்ஆர் மெட்ரிக் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் திருமதி விமல் ராணி தனது அனுபவங்களை தனக்கு பிடித்த ஆசிரியை பற்றி ஒன் இந்தியா தமிழ் இணைய தள நேயர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நமக்குக் கற்றுக்கொடுக்கும் குரு இறைவனுக்கு சமமானவர். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நன்றி கூறும் விதமாகவும் இன்றைக்கு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். இந்தியாவில், ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Teachers day 2023: School teacher Shares her experience best teacher

அதே நேரத்தில் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் இருந்து அக்டோபர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை கொண்டாட யுனெஸ்கோ அறிவித்தது. ரஷ்யா போன்ற பல நாடுகளில், ஆசிரியர் தினம் அக்டோபர் 5 அன்று மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் ஆசிரியர் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 40 ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றியவர். ஆசிரியர்களுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உண்மையான ஆசிரியர் சமுதாயத்திற்கு சரியான திசையை வழங்குவதற்காக பணியாற்றுகிறார் என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன். சமூகத்தில் எப்படி வாழவேண்டும் சமூகத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று கூறி வழிகாட்டும் ஆசிரியர்கள் சரியான திசையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்.

செப்டம்பர் 5ஆம் தேதியான இன்றைய தினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மலர்கள், இனிப்புகள், சாக்லேட்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட கிரீட்டிங் கார்டுகள் உட்பட பரிசுகளை தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு வழங்கி தங்களது நன்றியையும் பாசத்தையும் தெரிவிக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகள் போட்டிகளை நடத்தி மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

இன்றைக்கும் பல ஆசிரியர்கள் தங்களை ஆசிரியப்பணிக்காக அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்றனர். ஆசிரியர் தினம் இன்றைக்கு கொண்டாடப்படுவதை முன்னிட்டு எம்எஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றும் திருமதி விமல்ராணி, தனக்கு பிடித்த ஆசிரியர்கள் பற்றியும் பள்ளியில் மாணவர்களிடம் பாசமான ஆசிரியையாக நடந்து கொள்வது பற்றியும் தனது அனுபவங்களை நமது ஒன்இந்தியா தமிழ் இணைய தளத்திற்குப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆசிரியப்பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதற்கிணங்க கடந்த 15ஆண்டுகாலமாக ஆசிரியர்கள், குழந்தை செல்வங்களுடன் என்னுடைய பணியை தொடர்ந்து கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னதான் ஆசிரியராக பணியாற்றினாலும் என்னுடைய குழந்தை பருவத்தில் எனக்குப் பிடித்த ஆசிரியர்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசை.

நான் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள நாடார் ஜார்ஜ் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, என்னுடைய ஆங்கில ஆசிரியை டார்லிங் சிரோன்மணி அவர்கள், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு vowels தெரியாத காரணத்தால் என்னை வரவழைத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கச் சொன்னதை என்னால் மறக்க முடியாது. எனக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைப் போல தெரிவார்கள். கொள்ளை அழகு அந்த ஆசிரியை. கண்டிப்பது மட்டுமல்ல கற்றுக்கொடுப்பதிலும் அவர்தான் நம்பர் 1.

மூன்றாம் வகுப்பு வரை வகுப்புத் தலைவராக இருந்த போது திருமதி ஞானமணி ஆசிரியைக்கு பணிவிடை செய்ததை மறக்க முடியாது. இடை வேளை நேரத்தில் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவர்களுக்கு டீ வாங்கி வருவதும் கூட எனது தலையாய கடமை. தீபாவளி சமயங்களில் அம்மா உடன் ஆசிரியை வீட்டிற்கு சென்று பட்டாசுகளை கொடுத்து விட்டு அவரிடம் இருந்து இனிப்புகளை வாங்கி வந்து தம்பி, தங்கைகளுக்கு கொடுத்ததை மறக்கவே முடியாது. அந்த நிகழ்வுகள் கண் முன் அப்படியே நிற்கிறது.

அன்று முதல் இன்று வரை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் கற்றுக்கொண்டவைகளை எந்தவித பாகுபாடுமின்றி எனது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இனிமேலும் கற்றுக்கொடுப்பேன் இந்த கணித ஆசிரியை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+