Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலத்தை மீட்டு வரும் அரசு.. கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை: மதுரை ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: கோவிலில் ஆர்வமுள்ள எந்தவொரு நபரும் கோவிலின் சொத்துக்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடலாம் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஹைகோர்ட் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளின் இந்த உத்தரவானது பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 44,121 கோயில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை...

Temple Land Property tamil Nadu temple properties

அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், இந்த நிலங்கள் பெருமளவு ஆக்கிரமிப்பிலேயே உள்ளன. எனவேதான், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு

இந்நிலையில், கடந்த 2021-ல் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது.

அப்போது, தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், அந்த நிலங்களுக்கு உரிய வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும், கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், கோயில் நிலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், கோயில்களிலுள்ள சிலைகள், நகைகள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள்

இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.. அதுமட்டுமல்ல, கோவிலில் ஆர்வமுள்ள எந்தவொரு நபரும் கோவிலின் சொத்துக்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடலாம் என்றும், தெய்வத்தின் நலனைப் பாதுகாக்க நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில்கூட வழக்கு ஒன்றில் உத்தரவிட்டிருந்தது..

இந்நிலையில், கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை என்று மற்றொரு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தற்போது தெரிவித்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில் இப்படியொரு கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோயில் நிதி - வருவாய் இழப்பு

ஆழ்வார்திருநகரி ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்..

அந்த மனுவில், "சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். வருடந்தோறும் ஆடித்திருவிழா நடைபெறும். கோயிலை நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவில்லை. கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கோயில் வளாகம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்கவில்லை. வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுப்பாதை, கோயிலைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

கோயில் சொத்துக்கள்

இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், "ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை. ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது" என்று கூறி உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+