தட்டில் வரும் காணிக்கை அர்ச்சகருக்கா? அரசுக்கா? மதுரை ஈஓ அறிக்கையால் வந்த சர்ச்சை! பறந்த விளக்கம்!
மதுரை: கோவிலில் பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கை பணத்தை உண்டியலில் போட வேண்டும் எனவும் அந்த காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது எனவும் மதுரை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் செயல்பட்டு வருகிறது. வடபழனி முருகன் கோவில், பழனி முருகன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பெரிய அளவிலான கோவில்களும் சில இடங்களில் சிறிய அளவிலான கோவில்களும் இருக்கிறது.

ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு வருமானம் கொண்ட கோயில்களை தமிழ்நாடு அரசே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருகிறது. அந்த கோவிலுக்கான வருமானம், அன்னதானம், கோவில் பராமரிப்பு பணி, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. அன்னதானம் உண்டியல், ஆன்லைன் மூலமும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தலாம். மேலும் கோவிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த காணிக்கையை அர்ச்சகர்களே வைத்துக் கொள்வார்கள்.
இந்த நிலையில் தான் அதனை வைத்து புதிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. மதுரை நேதாஜி சாலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது காணிக்கையை அர்ச்சனை தட்டில் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என்றும் உடனுக்குடன் அவற்றை உண்டியலில் செலுத்த வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
மேலும் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதற்கு அர்ச்சகர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமூக வலைதளங்களிலும் விவாதம் எழுந்தது. இந்த நிலையில் தான் இந்த உத்தரவு திரும்ப பெறப்படுவதாக அறநிலையத் துறை சார்பில் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மண்டல இணை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கத்தில்," அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சட்டப்பிரிவு 46 ( II) இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக் கோவிலாகும். மேற்படி திருக் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால் ஆரம்ப காலத்தில் இருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் திருக்கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இருந்த போதும் திருக்கோயில் செயல் அலுவலரால் தட்டு காணிக்கை தொடர்பாக பிறப்பித்த உத்தரவு மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரால் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை திருக்கோவில் தக்காரிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications