மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான சேதி..! டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு.. விரைவில் பணிகள்!
மதுரை : மதுரையில் அமையவுள்ள டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும்
டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தார். "அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து முன்னோடி டைடல் பார்க் மதுரையில் நிறுவப்பட இருக்கிறது. இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படும். மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும்" எனத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டைடல் பார்க் மூலம் 10,000 போ் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தேர்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, கட்டுமான வரைபடம் தொடர்பான பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடுவதற்கான பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது என்று தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications