ஆட்டோகாரரின் மனைவியை.. ஆட்டையபோட்ட வில்லங்க போலீஸ்.. வெளியான பகீர் ஆடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டத்தில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ள தல்லாகுளம் காவலரிடம் இருந்து தனது மனைவி மற்றும் மகன்களை மீட்டுத் தரக் கோரியும், இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனைவிக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் எனக் கூறி காவலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், நாய்களை விட்டு கடிக்கவிடுவதாகவும், ஆட்களை வைத்து அடிப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். காவலருடன், ஆட்டோ ஓட்டுநர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madurai Police Crime

மதுரை மாவட்டம், புதூர் அழகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மீனாட்சி என்ற பெண்ணுக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் செல்வராஜ். தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் தயாளனின் குடும்பத்தினர் மிகவும் சகஜமாகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தயாளன் ஆட்டோ சவாரிக்குச் செல்லும்போதெல்லாம் செல்வராஜ் அவரது வீட்டுக்கு வந்து மீனாட்சியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இது தகாத உறவாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் தங்களது தகாத உறவை வளர்த்து வந்த நிலையில், தயாளனுக்கு மனைவியின் தவறான நடத்தை குறித்து தெரியவந்துள்ளது. இதையடுத்து, தயாளன் தனது மனைவி மீனாட்சியைக் கண்டித்துள்ளார். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலராக இருந்து கொண்டு ஏன் இந்த வேலையைச் செய்கிறீர்கள் என்று தயாளன் செல்வராஜிடம் நியாயம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த செல்வராஜ் மரியாதையாக உன்னுடைய மனைவியை விட்டுவிட்டு ஓடிப் போய்விடு என்று தயாளனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மீனாட்சி தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இரண்டு நாட்களில் வரவுள்ளது.

இந்நிலையில், மீனாட்சிக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் எனக் கூறி செல்வராஜ் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், நாய்களை விட்டு கடிக்கவிடுவதாகவும், ஆட்களை வைத்து அடிப்பதாகவும் குற்றம் சாட்டி காவல் ஆணையர் லோகநாதனிடம் ஆட்டோ ஓட்டுநர் தயாளன் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் தயாளன் கூறுகையில், காவலர் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், அவரே எனது மனைவியை தகாத உறவில் வைத்திருந்தால் என்ன செய்வது. எனக்கு எனது மனைவி மற்றும் மகன்கள் வேண்டும் எனக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். காவலர் செல்வராஜ் என்னை மிகவும் டார்ச்சர் செய்து வருகிறார். நேற்று கூட 4 பேர் என்னிடம் சம்பந்தமில்லாமல் வந்து பேசி அடிக்க வருகின்றனர். எனக்கு வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.

வீட்டிற்குச் சென்றால் நாயை விட்டு கடிக்க விடுகின்றனர். ஆட்களை வைத்து அடிக்க வருகின்றனர். வீட்டிற்கு நான் செல்வதற்கு முன்னாலேயே போலீஸ் வந்து நான் குடித்து விட்டு பிரச்னை செய்வதகாவும், அடிப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர். திருமணமான பத்து வருடத்தில் ஒருமுறை கூட நான் என் மனைவியை அடித்ததில்லை. எனது மனைவி மற்றும் மகன்கள் எங்குள்ளனர் என்று கூட எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் நான் இப்போது அனாதையாக நிற்கிறேன். காவலரின் தூண்டுதலின்பேரில் தான் எனது மனைவி விவாகரத்து கேட்கிறார்.

செல்வராஜின் மனைவியும் காவலராகத்தான் உள்ளார். அவர் இந்த தகாத உறவு குறித்து தட்டிக் கேட்டதற்கு அவரது மண்டையை உடைத்துள்ளார் செல்வராஜ். இதனால், அவரது மனைவி டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சொந்த ஊரான சேலத்துக்குச் சென்றுவிட்டார். எனது மனைவியை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன். அடுத்தவருடன் மனைவியை விட்டுவிட்டு வாழ்வதற்கு பதில் ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+