மதுரை மக்களின் மனசு தங்கம்.. அரசு பள்ளிக்காக ரூ.1 கோடி நிலத்தை வழங்கிய தம்பதி.. குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மேலூர் அருகே கீழையூரில் அரசு பள்ளி கட்டடம் கட்ட 1 கோடி மதிப்பிலான தனது 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ள கோபாலகிருஷ்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. படிப்புக்கு உதவி செய்தால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ரொம்ப உதவியாக இருக்கும்..இன்னும் அதிகமாக உதவி செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இது காண்போரை நெகிழ வைத்துள்ளது.

மதுரை மக்கள் பலர், தாங்கள் படிக்கவில்லை என்றாலும், தங்கள் ஊரில் பலர் படித்து மேலே வர வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள். மதுரை சுற்றுவட்டாரங்களில் எத்தனையோ ஏழைகள் நன்றாக படிக்க அரசு எவ்வளவுகாரணமோ, அதேபோல் ஏழை மக்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக தங்கள் நிலம், சொத்து, பணத்தை அள்ளிக்கொடுத்த கொடை வள்ளல்களும் முக்கிய காரணம் ஆகும்.

Madurai government school education

கடந்த ஆண்டு மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது 142 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் கடந்த ஆண்டு இருந்தனர். இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அப்போது மேலூர் கொடிக்குளம் வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான தற்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு இடத்தை தனது மகள் 'ஜனனி' நினைவாக அரசுக்கு ஜன.5ல் தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தார்.

இதேபோல் மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு வத்தல் தாத்தா என்ற டி.பி.ராஜேந்திரன் என்பவர் கோடிக்கணக்கான சொத்துகளை விற்று ஏழை மக்களின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். மதுரை திருவிக மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள், இறைவணக்கக் கூட்ட அரங்கம், வாகனம் நிறுத்துமிடம் உள்பட ரூ.1.10 கோடி செலவில் கட்டடங்களைக் வத்தல் தாத்தாகட்டிக் கொடுத்தார். கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் ரூ.71.45 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகளுடன், போர்வெல் வசதி, உணவுக்கூடம், கழிப்பறைகளைக் வத்தல் தாத்தா கட்டிக் கொடுத்திருக்கிறார்.

இப்படி மதுரையில் கல்வி சேவைகள் செய்து வருவர்கள் வரிசையில் கோபாலகிருஷ்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதி இணைந்துள்ளனர். மதுரை மேலூர் அருகே கீழையூரில் அரசு பள்ளி கட்டடம் கட்ட 1 கோடி மதிப்பிலான தனது 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இதுபற்றி தமிழ்ச்செல்வி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, "நானும் என் கணவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.. அதனால் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது கணவரின் நீண்ட நாள் விருப்பம்.. அதை கல்வியில் கொடுத்தோம் என்றால், குழந்தைகளின் வளர்ச்சிக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.. இன்னும் நிறைய செய்ய வேண்டும் நாங்கள்.. இது முன்னுதாரணமாக இருக்கும்.. வரும் தலைமுறை இதை பார்த்து அவர்களும் செய்வார்கள்.. பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா..அதை என் கணவர் செய்து, அதற்கு நான் ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+