மதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு - போலீஸ் விசாரணை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதற்கிடையில், கள்ளச்சந்தையில் மருந்துகள் 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. தமிழக அரசு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மருந்துகளின் உரிய விலைக்கு விற்பனை செய்து வருகிறது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
தென்மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளிக்கும் மையமாக மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு மருத்துவமனையில் நேற்றிரவு ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ரெம்டெசிவிர் மருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications